ஈரோடு மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக கோபிசெட்டிபாளையத்தில் தக்கர் பாபா வித்யாலயா பள்ளி விடுதி மாணவ மாணவியர் 130 நபர்களுக்கு காலை உணவு
காமராஜர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் எழுத்தாளர் , இலக்கியப் பேச்சாளர், தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி எளிமையின் நாயகன், காமராஜரின் தொண்டர், போன்ற பன்முகத்தன்மை கொண்ட திரு தமிழருவி மணியன் அவர்களின் 75 ஆவது ஆண்டு
பிறந்த நாளை முன்னிட்டு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா பள்ளி விடுதி மாணவ மாணவியர் 130 நபர்களுக்கு காலை உணவு ஈரோடு மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக வழங்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டுக்கான காமராஜர் மக்கள் கட்சியின் தினசரி காலண்டர் கட்சி நிர்வாகிகளால் ரிலீஸ் செய்யப்பட்டது .
இந்த நிகழ்வில் காமராஜர் மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் கார்த்திகேய முத்துக்குமார், மாவட்டச் செயலாளர் எஸ் ஆர் வேலுச்சாமி ,அந்தியூர் சட்டமன்ற தொகுதி தலைவர் ஏ ராஜேந்திரன் ,ஈரோடு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜோசப் ராஜன்,
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி இளைஞரணி தலைவர் ஜி ஆர் சென்னியப்பன், துணைத் தலைவர் சீனிவாசன் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.