ஊழலுக்கு எதிராக துவந்த யுத்தம் நடத்தியவர்
28/12/2023 ; சென்னை
கலையுலகில் தன் தனித்துவமிக்க நடிப்பினாலும், எம்ஜியாரைப் போன்று சமூக நலன் சார்ந்த பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து சமூகத் தீமைகளுக்கு எதிராகத் தார்மிக ஆவேசத்தை வெளிப்படுத்தும் வகையில் வாழ்ந்து காட்டியதாலும் கடைசி
கிராமத்து மனிதன் வரை பாதிப்பை ஏற்படுத்தி வெற்றி நாயகனாக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த்.
அரசியல் உலகில் மண்டிக் கிடக்கும் ஊழலுக்கு எதிராகத் துவந்த யுத்தம் நடத்தி மக்கள் நலனுக்கான மாற்றத்தைக் கொண்டு வரும் நோக்கில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை உருவாக்கி, மிக விரைவில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்து வரலாறு படைத்தவர் கேப்டன் விஜயகாந்த்.வெள்ளை மனமும், ஏழை, எளிய மக்கள் மீது எல்லையற்ற அன்பும், உதவி நாடி வந்தவர்க்கு அள்ளிக் கொடுக்கும் உயரிய பண்பும் ஒருங்கே கொண்ட ஓர் உயர்ந்த தலைவரை இன்று நாம் இழந்து விட்டோம். அவருடைய ஆன்மா அமைதியுற இறையருளைக் காமராஜர் மக்கள் கட்சியின் சார்பில் இறைஞ்சுகிறேன்.
வணக்கத்துடன் தமிழருவி மணியன் தலைவர் – காமராஜர் மக்கள் கட்சி