காஞ்சி மாவட்ட தலைவர் திரு பெத்தராஜ் அவர்கள் சென்னையில் வெள்ளம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்
சென்னை ,10/11/2023
நமது காமராஜர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு. தமிழருவியார் அவர்கள் அறிவுறுத்த நமது பொதுச் செயலாளர் குமரய்யா அவர்களின் முன்முயற்சியால் சென்னையில் வெள்ளம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க முடிவு செய்து தெரிவிக்கப்பட்டது. தெரிவித்தவுடன் காஞ்சி மாவட்ட தலைவர் திரு பெத்தராஜ் அவர்கள் காஞ்சி மாநகரத் தலைவர் திரு ஜெயபிரகாஷ் நமது கட்சியினர் திரு பாண்டியராஜன் சிவா குமரன் மற்றும் சிலர் இணைந்து அவர்களது நண்பர்களிடம் நன்கொடைகள் பெற்று ஏறக்குறைய ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து 1500 நபர்களுக்கு உண்டான புளியோதரை சாதம் பிஸ்கட்டுகள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் ஆகியவற்றை இன்று காலை இரண்டு மணியிலிருந்துதயார்படுத்தி சென்னைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இவர்களுடைய பணி பாராட்டுக்குரியது ஈடு இணையற்றது.



அவர்களுடன் சேர்ந்து வடசென்னை மாவட்ட தலைவர் திரு பிரபாகரன் அவர்களும், மத்திய சென்னை மாவட்ட தலைவர் திரு ரவிச்சந்திரன் அவர்களும், மாநிலச் செயலாளர் திரு ரங்கராஜன் அவர்களும், ஆலந்தூர் தொகுதி தலைவர் திரு மணிவண்ணன் அவர்களும், நம் கட்சியின் உறுப்பினர்களான பேராசிரியர் திரு. காளி ராஜா மற்றும் அட்வகேட் செல்வராஜ் இன்னும் சிலரும் சேர்ந்து நமது பொதுச் செயலாளர் திரு குமரய்யா தலைமையில் மகளிர் அணி செயலாளர் திருமதி மீனா ஞானசேகரன் அவர்களும் உதவிட சென்னையில் எஸ் எஸ் புறம் பார்த்தசாரதிபுரம் கன்னிகாபுரம் டஸ்ரான்ஸ் ரோடு போன்ற ஏழை மக்கள் வெள்ளத்தால் பாதிப்படைந்து உணவுக்காக தவிக்கும் நிலையில் நம்மால் முடிந்த அளவு உதவிகளை செய்து முடித்தோம்.



அதற்கு ஆதரவு கரம் நீட்டிய, நிதியளித்து உதவிய நல்லுள்ளங்கள் எல்லோருக்கும் வணக்கத்தையும் நன்றியையும் செலுத்துகிறோம் காமராஜ் மக்கள் கட்சி முடிந்தவரை தன்னுடைய மக்கள் சேவையை இது போன்ற சந்தர்ப்பங்களில் எந்தவித விளம்பரமும் இன்றி செய்திட வேண்டும் என்று தலைவர் அறிவுறுத்திட அதைப் பின்பற்றி அனைவரும் எந்த விளம்பரமும் செய்யாமல், கொடியையோ, பேனரையோ கட்டாமல் ஓட்டு அரசியலுக்காக செய்யாமல், உண்மையான மக்கள் நலனுக்காக செய்யப்பட்ட நிறைவோடு இன்றைய நிகழ்வு நிறைவுற்றது என்பதை அன்புடனும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஞாயிறு பிரியாணி உண்ணும் தாகத்திலிருக்கும் மக்கள் புளிசாதத்தின் ருசியை கண்டு மீண்டும் வந்து வாங்கிச் சென்றனர். அதைத் தயாரிக்க ஏற்பாடு செய்த பெத்தராஜ், ஜெய் மற்றும் தயாரித்த சமையல்காரருக்கும் நமது சிறப்பு நன்றியை உரித்தாக்குகின்றோம்.


