தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நிர்வாகிகள் நியமனம்

தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நமது காமராஜர் மக்கள் கட்சியின் பணிகளை மேலும் விரிவுபடுத்திட வசதியாக மாநில நிர்வாகிகளுக்கு, மாவட்டப் பொறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்பட்டு உள்ளன. மாநில நிர்வாகிகள், தங்கள் பொறுப்பு மாவட்டங்களின் உள்ள மாவட்ட, தொகுதி நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மதுரை மண்டலம்: இந்த மண்டலத்தில் 1.மதுரை, 2.திண்டுக்கல், 3.தேனி ,4.திருநெல்வேலி, 5.தூத்துக்குடி, 6.தென்காசி, 7.கன்னியாகுமரி, 8.இராமநாதபுரம் , 9.விருதுநகர், 10.சிவகங்கை மாவட்டங்களில், மாநில துணைத் தலைவர் திரு இரா கதிரேசன், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் திரு சு ஈஸ்வரன், மாநில மகளிர் அணிச் செயலாளர் திருமதி ஐஸ்வர்யா சுரேஷ்,மாநில மகளிர் அணிச் செயலாளர் திருமதி உமாராணி சிவகுமார் ஆகியோருடன் இணைந்து முதன்மைச் செயலாளர் திரு சீ கிருஷ்ணமூர்த்தி கட்சிப் பணிகளை ஒருங்கிணைப்பார்.

விழுப்புரம் மண்டலம்: இந்த மண்டலத்தில் 1.விழுப்புரம், 2.கடலூர், 3.கள்ளக்குறிச்சி, 4.தஞ்சாவூர், 5.மயிலாடுதுறை, 6.திருவாரூர், 7.நாகப்பட்டினம் 8. புதுச்சேரி மாவட்டங்களில், மாநிலத் துணைத் தலைவர் ஓகே டெக்ஸ் மு கந்தசாமி, ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் ஸ்ரீ நாகராஜன், கலை இலக்கியப் பிரிவுத் தலைவர் திரு இரா சுப்ரமணிய பாரதி, மாநிலப் பொறியாளர் அணித் தலைவர் திரு ப வரதராஜன் ஆகியோருடன் இணைந்து மாநிலச் செயலாளர் திரு இரா கதிரவன்,:கட்சிப் பணிகளை ஒருங்கிணைப்பார்.

திருச்சி மண்டலம்: இந்த மண்டலத்தில் 1.திருச்சிராப்பள்ளி, 2.புதுக்கோட்டை, 3.அரியலூர், 4.பெரம்பலூர், 5.கரூர், 6.ஈரோடு மாவட்டங்களில், மாநிலத் துணைத் தலைவர் கி நா ஜெயராமன், மாநில இளைஞர் அணிப் பொதுச் செயலாளர் திரு க அருண்குமார், மாநில விவசாய அணித் தலைவர் குரு ரங்கதுரை ஆகியோருடன் இணைந்து மாநிலச் செயலாளர் திரு இரா ரெங்கராஜன் கட்சிப் பணிகளை ஒருங்கிணைப்பார்.

கோவை மண்டலம்: இந்த மண்டலத்தில் 1.கோயம்புத்தூர், 2.திருப்பூர் 3.நீலகிரி 4.சேலம் 5.நாமக்கல் 6.தர்மபுரி மாவட்டங்களில், மாநில துணைத் தலைவர் திரு க சிதம்பரம், மாநில கொள்கை பரப்பு அணித் தலைவர் திரு கி தேவராஜன், மாநில கொள்கை பரப்புச் செயலார் க சுரேஷ்குமார், மாநில மகளிர் அணிச் செயலாளர் திருமதி கீதா பழனிச்சாமி ஆகியோருடன் இணைந்து மாநிலச் செயலாளர் திரு அ கிறிஸ்டி கட்சிப் பணிகளை ஒருங்கிணைப்பார்.

சென்னை மண்டலம்: இந்த மண்டலத்தில் 1.தென் சென்னை, 2.மத்திய சென்னை, 3.வட சென்னை, 4.திருவள்ளூர் , 5.காஞ்சிபுரம், 6.செங்கல்பட்டு மாவட்டங்களில், மாநில வழக்கறிஞர் அணித் தலைவர் இரா பிரபாகரன், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் கவிஞர் வாசுகி சீனிவாசகம், மாநில மகளிர் அணிச் செயலாளர் திருமதி மீனா ஞானசேகரன், மீனவர் அணித் தலைவர் இராயபுரம் கண்ணன் ஆகியோருடன் இணைந்து மாநிலச் செயலாளர் திரு அ பாரி கட்சிப் பணிகளை ஒருங்கிணைப்பார்.

திருவண்ணாமலை மண்டலம்: இந்த மண்டலத்தில் 1.திருவண்ணாமலை 2.வேலூர், 3.இராணிப்பேட்டை, 4.திருப்பத்தூர், 5.கிருஷ்ணகிரி மாவட்டங்களில், மாநிலத் தகவல் தொழில் நுட்ப அணித் தலைவர் திரு வே சாந்தமூர்த்தி, மாநில மகளிர் அணித் தலைவர் திருமதி வள்ளி இரமேஷ், மாநில இளைஞர் அணித் தலைவர் திரு மு சதீஷ்குமார் ஆகியோருடன் இணைந்து கட்சிப் பணிகளை மாநிலச் செயலாளர் திரு கு ஜெயகாந்தன் ஒருங்கிணைப்பார்.

வணக்கத்துடன்

பா குமரய்யா (தொடர்புக்கு: 98410 20258),

மாநிலப் பொதுச் செயலாளர், காமராஜர் மக்கள் கட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *