திருவண்ணாமலை மாவட்டம் வானாபுரம் மாணவர்களுக்கு காமராஜர் மக்கள் கட்சி திரு கு .ஜெயகாந்தன் அவர்களின் தலைமையில் மரக்கன்றுகள்
திருவண்ணாமலை ,17/12/2023
காமராஜர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஐயா திரு தமிழருவி மணியன் அவர்களின் பிறந்தநாள் 75 முன்னிட்டு கட்சியின் மாநில செயலாளர் திரு கு .ஜெயகாந்தன் அவர்களின் தலைமையில் திருவண்ணாமலையில் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
முதற்கட்டமாக திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளில் மகளிர் அணி தலைவர் திருமதி வள்ளி ரமேஷ் முன்னிலையில் இளைஞர் அணி தலைவர் திரு சதீஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் , பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தலைவர் அவர்கள் பிறந்த நாளை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுக்கு தயாராகி வரும் திருவண்ணாமலை மாவட்டம் வானாபுரம் மாணவர்களுக்கு காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
முன்னதாக காமராஜர் மக்கள் கட்சியின் பணிகளைப் பற்றியும் தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்களை பற்றியும் மாணவர்களுக்கு மாநில செயலாளர் திரு ஜெயகாந்தன் அவர்கள் உரையாற்றினார். இதனை தொடர்ந்து மாநில நிர்வாகிகள் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி தலைவர் மாணவர் மாணவியருக்கு இலவசமாக கன்றுகள் வழங்கினர்.