ஈரோடு மாவட்டம்,பவானிசாகர் சட்டமன்றத்தொகுதிச் செயலாளராக திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் நியமனம்
ஈரோடு மாவட்டம் தமிழ்நாட்டின் வடமேற்குப் பகுதியில் கர்நாடக மாநிலத்தினை ஒட்டி அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் கிழக்கில் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்கள் அமைந்துள்ளன. தெற்கில் திண்டுக்கல் மாவட்டமும், மேற்கில் திருப்பூர், கோயமுத்தூர், நீலகிரி மாவட்டமும் அமைந்துள்ளன. ஈரோடு மாவட்டம், முக்கியமான பகுதியில், கடற்கரை ஏதும் இல்லாத நிலப்பகுதியாக அமைந்துள்ளது. மாவட்டம் அமைந்துள்ள நிலப்பகுதி சமநிலப் பகுதியாகவும், தென்திசை நோக்கியும், தென்கிழக்கு திசையில் காவேரியாற்றினை நோக்கியும் சிறிது சாய்வாகவும் அமைந்துள்ளது. காவேரியாற்றின் முக்கிய கிளை நதிகளான பவானி மற்றும் நொய்யல் மற்றும் பாலாறு ஆறுகள் இம்மாவட்டத்தின் பெரும் பகுதி நிலங்கள் வழியாக பாய்கின்றன.
பவானி , பாலாறு மற்றும் நொய்யல் ஆறுகள் இம்மாவட்டத்தின் வடக்கு மற்றும் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள மலைகளில் இருந்து உற்பத்தியாகி ஈரோடு மாவட்டத்தில் பாய்கின்றன. காவேரி ஆறு ஈரோடு மாவட்டத்திற்கு கிழக்கு எல்லையாகவும் விளக்குகிறது. காவேரி ஆறு ஈரோடு மாவட்டத்திற்கும் நாமக்கல் மாவட்டத்திற்கும் எல்லையாக விளங்கி, தென்திசை நோக்கி பாய்ந்து செல்கிறது.
கோயமுத்தூர் மாவட்டத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் அரசு ஆணை எண்.1917 வருவாய் துறை நாள் 31.08.1979-ன்படி பிரிக்கப்பட்டு அமைக்கப்பட்டது.
21ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பவானி, ஈரோடு மற்றும் சத்தியமங்கலம் வட்டங்கள் கோயமுத்தூர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. சத்தியமங்கலம் வட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டமாக பெயார் மாற்றம் செய்யப்பட்டு, சத்தியமங்கலம் உப வட்டமாக அமைக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டில் சத்தியமங்கலம் உப வட்டம் வட்டமாக தகுதி உயார்வு செய்யப்பட்டது. 1979ஆம் ஆண்டில் பெருந்துரை உப வட்டம் வட்டமாக தகுதி உயார்வு செய்யப்பட்டது.
2008ஆம் ஆண்டில் ஈரோடு மற்றும் கோயமுத்தூர் மாவட்டங்கள் மறுவரையறை செய்யப்பட்டு திருப்பூர் மாவட்டம் அரசு ஆணை எண்.617 மற்றும் 618 வருவாய்த் துறை-யின்படி உதயமாகியது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து தாராபுரம், காங்கயம் வட்டங்களும், பெருந்துறை வட்டத்தில் இருந்து 49 கிராமங்கள் பிரிக்கப்பட்டு திருப்பூர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.
2012ஆம் ஆண்டில் பவானி மற்றும் கோபிசெட்டிபாளையம் வட்டங்கள் மறுவரையறை செய்யப்பட்டு புதியதாக அந்தியூர் வட்டம் அமைக்கப்பட்டது. அரசு ஆணை எண்.41 வருவாய் (வநி(1) துறை நாள் 20.01.2016-ன்படி ஈரோடு வட்டம் பிரிக்கப்பட்டு கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சி வட்டங்கள் அமைக்கப்பட்டன. அரசு ஆணை எண்.66 வருவாய் (வநி(1) துறை நாள் 09.02.2016-ன்படி சத்தியமங்கலம் வட்டம் பிரிக்கப்பட்டு தாளவாடி வட்டம் அமைக்கப்பட்டது.
அரசு ஆணை எண்.-ன்படி கோபிசெட்டிபாளையம் வட்டம் பிரிக்கப்பட்டு, நம்பியூர் வட்டம் அமைக்கப்பட்டது. இதன்படி தற்போது ஈரோடு மாவட்த்தில் 10 வருவாய் வட்டங்கள் உள்ளன. இவை ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், நம்பியூர், சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி
காமராஜர் மக்கள் கட்சியின் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிச் செயலாளராக திரு வி கோபாலகிருஷ்ணன் (90807 76384) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, தொகுதியில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.