காரைக்கால் வக்ஃபு நிர்வாக சபை பழமையை பாதுக்காக்க காமராஜர் மக்கள் கட்சியின் சார்பில் வேண்டுகிறோம்

காரைக்கால்

பழமைவாய்ந்த காரைக்கால் கிதர்ப்பள்ளியை விரிவாக்கம் செய்யும் போது பாரம்பரியமான பழமைவாய்ந்த மினாராவை இடிக்க நிர்வாகம் முற்பட்டது, பழமை பாதுகாக்கபட வேண்டும் என்ற கருத்தில் உள்ள ஜமாத்தார்கள் ஆதரவினால் தடுத்து நிறுத்தப்பட்டது.

அது இன்றளவிலும் பள்ளியின் பெருமையை பறைசாற்றும் விதமாக இருந்து வருகிறது, சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் மினாராவின் மேல்பகுதியில் அரசமரக்கன்று செழுமையாக வளர்ந்துள்ளது.

அதை இப்படியே கவனிக்காமல் விட்டால் மினாராவில் சிதைவு ஏற்பட்டு பாரம்பரியமான பழமை பறிபோகும்! பழமை பாதுகாக்கப்பட வேண்டும்! காரைக்கால் வக்ஃபு நிர்வாக சபை அப்பகுதியில் செழுமையாக வளர்ந்திருக்கும் மரக்கன்றுகளை அகற்றி அவ்விடத்தை சுத்தம் செய்து பழமையை பாதுக்காக்க காமராஜர் மக்கள் கட்சியின் சார்பில் வேண்டுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *