ரௌத்திரம் இலக்கிய வட்டம் சார்பில் புத்தக வெளியீட்டு விழா தலைவர்கள் பங்கேற்பு
ஜனவரி 6 2024 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் ரௌத்திரம் இலக்கிய வட்டம் சார்பில் அய்யா தமிழருவி மணியன் அவர்கள் நூல் வெளியீட்டு விழா டாக்டர் எம் ஜி ஆர் ஜானகி கலை அறிவியல் கல்லூரி (பழைய சத்யா ஸ்டுடியோ) சென்னை 600028 நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கியவர் திருமதி மீனா ஞானசேகரன் மகளிர் அணி மாநில செயலாளர். மேலும் இந்நிகழ்ச்சியில் கட்சி தொண்டர்கள் மற்றும் காமராஜர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் புத்தக வாசிப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் காமராஜர் மக்கள் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் திரு வே. சாந்தமூர்த்தி தலைமை தாங்கினார் . வரவேற்புரை திரு அ பாரி அவர்கள் வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் முன்னிலை திரு பா குமரய்யா மாநில பொதுச்செயலாளர் மற்றும் திரு பொன் கோவிந்தராஜ் மாநில பொருளாளர், திரு இரா ரங்கராஜன் மாநிலச் செயலாளர், திரு குமார் ராஜேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். மேலும் மேதகு ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திருமிகு சி பி ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்தியன் பாலிடிக்ஸ் அண்ட் சொசைட்டி என்ற நூலை வெளியிட மூத்த வழக்கறிஞர் திரு மிகு கே எஸ் ராதாகிருஷ்ணன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

மேனாள் மத்திய அமைச்சர் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் திருமிகு பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் “வாழ்ந்திடச் சொல்கிறேன்” என்ற நூலை வெளியிட , மேனாள் சென்னை மாநகர மேயர் திருமிகு சைதை எஸ். துரைசாமி அவர்கள் பெற்றுக் கொண்டார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திருமிகு கு அண்ணாமலை அவர்கள் “என் ஜன்னலுக்கு வெளியே” என்ற நூலை வெளியிட தலைவர் எஸ் ஆர் எம் தமிழ் பேராயம் முனைவர் திருமிகு கரு நாகராஜன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.


மேனாள் மத்திய அமைச்சர் தலைவர் தமிழ் மாநில காங்கிரஸ் திருமிகு ஜி கே வாசன் எம்பி அவர்கள் காமராஜர் பொற்கால ஆட்சி சாதனைகள் நூலை வெளியிட துணை தலைவர் பாரதிய ஜனதா கட்சி பேராசிரியர் முனைவர் திருமிகு கனகசபாபதி அவர்கள் பெற்றுக் கொண்டார்.


எஸ் ஆர் எம் பல்கலைக்கழக வேந்தர் திருமிகு பாரிவேந்தர் எம்பி அவர்கள் வாழ்க்கை ஓர் இனிய வரம் என்ற நூலை வெளியிட காமராஜர் மக்கள் கட்சி ஆட்சி மன்ற குழு தலைவர் திருமிகு இரா. கண்ணன் அவர்கள் நூலை பெற்றுக் கொண்டார்.


இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் உரைக்குப்பின் காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் திரு மிகு ஐயா தமிழருவி மணியன் ஏற்புரை வழங்கினார். இவரை தொடர்ந்து காமராஜர் மக்கள் கட்சியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் கவிஞர் ந வாசுகி சீனிவாசகம் அவர்கள் தனது உரையை நிகழ்த்தினார்.



புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் இறுதியாக நன்றியுரை திரு இரா சுப்பிரமணிய பாரதி கலை இலக்கிய அணி தலைவர் காமராஜர் மக்கள் கட்சி அவர்கள் வழங்கினார்.
