காமராஜர் மக்கள் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனான வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த வாரம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார் டிரைவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் உதவியாளர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். வெற்றி துரைசாமியின் உடல் மட்டும் கிடைக்கவில்லை. 8 நாட்களாக தேடுதல் வேட்டை நடைபெற்றது.

Vetri Duraisamy Engagement Stills

இந்த நிலையில் விபத்து நடந்த 8 நாட்களுக்குப் பிறகு வெற்றி துரைசாமியின் உடல் நேற்றைய தினம் கண்டெடுக்கப்பட்டது. விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து, 2 கிலோ மீட்டர் தொலைவில் வெற்றியின் உடல் மீட்கப்பட்டது. பாறையின் அடியில் உடல் சிக்கியிருந்த நிலையில், மீட்பு படை வீரர்கள் அவரது உடலை கண்டுபிடித்தனர். வெற்றி துரைசாமியின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் உற்ற நண்பர், மனித நேயர் திரு சைதை சா துரைசாமி அவர்களின் அன்பு மகன், அவரைப் போன்று மக்கள் நலப் பணிகளில் தன் மனதைப் பறி கொடுத்தவர், திரு வெற்றி துரைசாமி அவர்களின் மறைவிற்கு காமராஜர் மக்கள் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *