நம் கடின உழைப்பால்…!!!! தேர்தல் களம் வெற்றி காண்போம்
செங்கல்பட்டில் 10/03/2024 நடந்த பொதுக்குழு கூட்ட செய்தி பின்வருமாறு…
வருகிற பாராளுமன்றத் தேர்தல் 2024 தேர்தலில் BJP கூட்டணியில் நமது கட்சிக்கு நிச்சயம் ஒரு MP சீட் வழங்குவதென உறுதியளிக்கப்பட்டுள்ளதாக ஐயா தெரிவித்தார். தொண்டர்கள் அனைவரது விருப்பப்படி நமது கட்சியின் MP வேட்பாளராக ஐயா தமிழருவி மணியன் அவர்கள் போட்டியிட உள்ளார்.
மற்ற கட்சிகளை போல் நாம் ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள் அல்ல. ஆனாலும் அடிப்படை பிரச்சார செலவுகளுக்கு நமக்கு ஒரு குறைந்தபட்ச நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. எனவே, உங்களை கூடுதல் நிதி சுமைக்கு உள்ளாக்கிக் கொள்ளாத வகையில் உங்களால் முடிந்ததையும், உங்களுக்கு தெரிந்த உங்கள் நண்பர்களிடம் நான் MP தேர்தலில் போட்டியிடுவதை எடுத்துச் சொல்லி அவர்களிடம் நன்கொடை பெற்று கட்சி கேட்கும்போது தேர்தல் நிதியாக கொடுங்கள் என்றும் ஐயா கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் களம் பற்றியும் , தேர்தலில் எவ்வாறு களமாட வேண்டும் என்பதை பற்றியும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
தலைவர் போட்டியிடும் ஒரே தொகுதியில் ஒட்டுமொத்த நம் இளைஞர் படையும் சென்று பிரச்சாரத்தை எடுப்போம்.. நம் தலைவரை புதிய நாடாளுமன்றத்தில் பார்ப்போம்..!