கச்சத்தீவை மீட்கும் தி.மு.க.,வின் அரசியல் பேச்சு மக்களிடம் எடுபடுமா?
ஒருபுறம் கச்சத்தீவை இலங்கையிடம் தாரை வார்ப்பதற்கு முழு இசைவை தெரிவித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. மறுபுறம் சர்வ கட்சி கூட்டம், சட்டசபை தீர்மானம், சந்து முனைகளில் உரிமைப்போர் என கபடநாடகம் நடத்தி போலித்தனத்திலும், பொய்மை குணத் திலுமான அரசியலை முன்னெடுத்து வளர்ந்த கூட்டமே.தி.மு.க.. என்பதை கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் அறிவர்.
கச்சத்தீவை திரும்ப பெற மோடிக்கு, கடிதம் எழுதுவதாக கூறும் முதல்வர் ஸ்டாலின், தந்தை வழியில் பயணித்து இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்ற கற்றுள்ளார் என்பது தெளிவுபட தெரிகிறது. இவர்களின் கபட நாடகம் இனி மக்களிடம் எடுபடாது. கச்சத்தீவை மீட்க ஸ்டாலினால் முடியாது.
மோடியை பொய்யர் என, ஸ்டாலின் பொது மேடைகளில் தொடர்ந்து முழங்குகிறாரே?
‘அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு, ரூபாய்க்கு 3 படி அரிசி’ என போலி வாக்குறுதி, அதி, ஹிந்தியை எதிர்த்து ஒரு லட்சம் பேர் சிறை செல்வர் என, கவர்ச்சி அரசியலை முன்னெடுத்தவர்கள். சாராய சாம்ராஜ்யத்திடம் சமூகத்தை ஒப்படைத்து விட்டு, 2016ல் ஆட்சியமைக்க மதுவிலக்கே முதல் கையெழுத்து என போலி பரப்புரை செய்த வரலாறு, உலக அரசியல் கட்சி களில் தி.மு.க.,வுக்கே முதல் இடத்தை உரித்தாக்கும்.
ஆட்சியமைத்து மூன் றாண்டுகள் முடிவடைந்தும், மதுவிலக்கு பற்றிய நினைவே சிறிதும் இல்லாதவாறு ஒற்றுமையாக செயல்படும் அரசியல் கட்சிகள் கூட்டமே, இன்று பிரதமர் மோடியை பொய்யர் என கதை சுட்டுகின்றனர்.