பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த கூட்டம் இது…

பாஜக எழுப்பி இருக்கும் நூறு கேள்விகளும் பொய் என்று திமுக தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இதுதான் மிகப்பெரிய பொய். 463 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம், மீதியை இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றுவோம் என்று கூறி இருக்கிறார்கள். இந்த 462 வாக்குறுதிகளை நிறைவேற்றியதை, ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிடத் திமுக தயாரா?

வேங்கை வயல் விவகாரம் குறித்து உயர்நீதிமன்றம் தலையிட்டு ஜூலை மூன்றுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறது. சமூக நீதிக் காவலர்களே, அது குறித்து எழுப்பப்பட்ட கேள்வி பொய்யா? பதில் சொல்லுங்கள்!

ரூபாய்க்கு மூன்று படியில் தொடங்கி, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் என்று ஏய்க்கும் போக்கு தானே இன்றைக்கும் தொடர்கிறது. கபட நாடகம் ஆடுவது என்பது இவர்களுக்கு கைவந்த கலை. கச்சத்தீவை தாரை வார்ப்பதற்கு மத்திய அரசுக்குத் துணை நின்று விட்டு, சட்டசபையில் தீர்மானம், மக்களவையில் எதிர்க் குரல் என்று கள்ளக் களம் ஆடிய உத்தமர்தானே கருணாநிதி அவர்கள்!

கச்சத்தீவை விட்டுக் கொடுக்காது இருந்து இருந்தால், தமிழக மீனவர்கள் இவ்வளவு இழப்புகளை சந்தித்து இருக்க மாட்டார்களே! மனசாட்சி உள்ள திமுககாரர்கள் சிந்தித்துப் பார்க்கட்டும். ஓ! அதுதான் ஊர் சுற்றக் கிளம்பி, நாட்கள் பல ஆகிவிட்டதே!

கச்சத்தீவைக் காக்க முடியாத கலைஞரின் வாரிசு தான், இந்தியாவை காக்கப் போகிறாரா? பொய்யான வாக்குறுதிகளை நம்பி, தமிழகத்தைத் தந்ததற்கே, தலைமுறைக்கும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

இவர்களிடமா இந்தியாவை ஒப்படைக்கப் போகிறோம்? சிந்தித்து செயல்படுவோம்! நிலையான வளர்ச்சியைத் தருகின்ற பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

பா குமரய்யா
மாநிலப் பொதுச் செயலாளர் காமராஜர் மக்கள் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *