மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருப்பார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.

முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் பல கோரிக்கைகளை நிறைவேற்றத் தயாரா? என்று கேட்டிருக்கிறார். ஒரு 23 கேள்விகளோடு அவர் பேசியது நேற்று நாளிதழ்களில் வந்திருக்கிறது.

கேட்க வேண்டியதுதான்! கேட்பது அவர் உரிமையும் கூட. யார் ஒருவரும் எந்தக் கேள்வியும் கேட்கலாம் என்றாலும் கூட கேட்பதற்கு முன் தன்னைச் சுயப் பரிசீலனை செய்து கொள்வது அவசியம்.

தமிழ்நாட்டின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த உதயகுமார் மரணம் சம்பந்தமான விஷயங்கள்’ திருச்சி கிளைவ் ஹாஸ்டல் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்’ பாளையங்கோட்டையில் லூர்து நாதன் மரணம் ‘போன்றவற்றுக்கு பின்னணி என்ன?

1992 வரை தமிழ்நாட்டில் விவசாயிகளின் மீது துப்பாக்கி சூடு நடத்தி 47 to 57 நபர்கள் இறந்து போனார்கள். யார் காரணம். அதில் 1969-74 களிலே நடந்த துப்பாக்கி சூட்டில் சுமார் 18 மேல் பேர் பலியானார்கள். அன்று யார்ஆட்சி?காவிரி முல்லைப் பெரியார் நொய்யாறு பாலாறு போன்ற 19 நதிகளின் நீர்ப்பங்கீடு இன்னும் பேசித் தீர்க்கப்படாமல் கிடப்பதற்கு யார் காரணம்?அதுமட்டுமல்ல கச்சத்தீவு பிரச்சினையோடு சேது சமுத்திர கால்வாய் திட்டம் ஏராளமான பொருட்செலவில் நிறைவேற்றப்பட்டு அது இன்னும் முழுமை பெறாமல் கிடப்பதற்கு யார் காரணம்?

ஈழத் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட துயரங்களை மறக்க முடியுமா? அதன் உண்மையான பின்னணி என்ன?கடந்த 1969 70களில் நவசக்தி அலை ஓசை குமுதம் இந்து என பல பத்திரிகைகளைப் பலவிதமான சங்கடங்களுக்கு உட்படுத்தித் துன்புறுத்தியதும் ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை தர்மத்தைச் செயல்படவிடாமல் தடுத்ததற்கெல்லாம் யார் காரணம்?.

தாமிரபரணி நதியில் மூழ்கி 16 பேர் இறந்தார்களே! அந்த அடக்கு முறையை எப்படி வர்ணிப்பது. அதற்கு யார் காரணம்.தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்க அனுமதி,நிலங்களைக் கையகப்படுத்தி யார் அந்த நிறுவனத்திற்கு வழங்கியது அதன் பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் நில உரிமைப் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகளைக் குண்டாஸ் சட்டத்தில் போட்டது யார் செய்த வேலை? இப்படி இன்னும் பல விதமான நீண்ட அவர் நீண்ட குற்றச்சாட்டுகளை வரிசையாக திமுகவின் மீதும் முதல்வர் ஸ்டாலின் மீதும் வைக்கலாம் . இதற்கெல்லாம் அவர் என்ன பதில் சொல்லப் போகிறார்?தன் கண்ணில் உத்தரம் அளவு தூசியை வைத்துக்கொண்டு அடுத்தவர் கண்ணில் துரும்பு இருக்கிறது என்று சொல்வதற்கு கொஞ்சமனும் அரசியல் யோக்கியதை வேண்டாமா?

நீங்கள் இன்னும் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இந்தத் தேர்தலைச் சந்திக்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியாதா? மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருப்பார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *