சிவகங்கை மாவட்ட மக்களுக்கு கோடைகால நீர்மோர் வழங்கும் விழா

1/05/2024; புதன் கிழமை

சிவகங்கை மாவட்டம் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மரக்கன்று வழங்குதல், உணவு பொட்டலங்கள் வழங்குதல், பொது சுகாதார மற்றும் மக்கள் பயனுள்ள வகையில் பயன்படும் திட்டங்களுக்கு மனு மூலம் தீர்வு காணுதல் என பல்வேறு மக்கள் பணிகளை செய்து வருகிறது.பல்வேறு சூழல்களிலும் நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் கோடை காலத்திலும் மக்களுக்கு பயனுள்ள வகையில் மக்கள் பணியில் செய்து வருகிறது. கோடை வெயில் தாக்குதல் அதிகமாக இருப்பதால் மாவட்டம் முழுவதும் நடமாடும் நீர்மோர் வாகனம் மூலம் மாவட்டம் முழுவதும் பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என முடிவெடுத்து அதில் முதல் கட்டமாக மே தினத்தை முன்னிட்டு1/05/2024 இன்று காரைக்குடியில் துவங்கியது.

மாவட்டத் தலைவர் திரு.அ. அருளானந்து மாநகரத் தலைவர் திரு.ரா .அழகர் மாவட்ட மாற்றுத்திறனாளி நலப் பிரிவு செயலாளர் திரு.நந்தகுமார்,மாவட்ட பொருளாளர் திரு.பூவை சம்பத், திரு.கண்ணன் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர்மோர் நடமாடும் வாகனம் மூலமாக வழங்கப்பட்டது.

நன்றி; சிவகங்கை,காமராஜர் மக்கள் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *