ஜனநாயகத்தின் காவலரா, நீங்கள்?

10/05/2024;

அண்மைக் காலமாக தினமலர் நாளிதழ், தமிழகத்தில் உள்ள அரசு நூலகங்களில் வாங்கப்படுவதில்லை. முரசொலி, தினகரன், தமிழ் முரசு போன்ற கழகக் குடும்ப இதழ்கள் வாங்கப்படும் போது தினமலர் மட்டும் ஏன் நிறுத்தப்பட்டுள்ளது?
தினமலர் நாளிதழ் நிறுத்தப்பட்டதற்கான காரணங்களை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

மக்கள் எதிர்கொள்ளும் குறைகளை, தமிழக அரசின் நிர்வாகச் சீர்கேடுகளை, ஊழல்களை, ஆளும் கட்சியின் அராஜகங்களை தினமலர் தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகிறது; அவ்வாறு செயற்படுவதற்கான தண்டனையாகத் தான் தினமலர் நிறுத்தப்பட்டதோ என்ற ஐயம் எழுகிறது. தன்னை ஜனநாயகக் காவலர் என்று மார் தட்டிக் கொள்ளும் தமிழக முதல்வர், தமிழக அரசு நூலகங்களில் பொதுமக்கள் படிப்பதற்கு வசதியாக மீண்டும் தினமலர் நாளிதழை வாங்கிட ஆணையிட வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *