தி.மு. கழகம் சில உண்மைகள், சில சந்தேகங்கள்…
04.05.24 புதுவை
சகல மட்டங்களிலும் ஆட்சி நடத்தும் அரசியலும், சினிமாவும் அற்பத்தனங்களுக்கு மட்டுமே அரச மகுடம் சூட்டிக் கொண்டு இருக்கின்றன.அரசியல், நல்லவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அசிங்கப்பட்டுக் கிடக்கிறது. சினிமா… வன்முறை வெறியைத் தவிர வேறு எதுவுமே வாழ்க்கையில்லை என்று சாதிக்க முயல்கிறது. அந்த வகையில் திராவிட மாடல் ஆட்சியின் உண்மை நிலை பற்றி வெளிப்படுத்தும் வகையை வகையில் கட்சி தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
காமராஜர் மக்கள் கட்சியின் மாநில செயலாளர் திரு .இரா.கதிரவன் அவர்கள் தலைமையில் புதுவை மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.லட்சுமி நாராயணன் அவர்களிடம்,தலைவர் திரு.தமிழருவி மணியன் அவர்களின் “தி.மு.கழகம் சில உண்மைகள், சில சந்தேகங்கள்…”எனும் புத்தகத்தை வழங்கிய தருணம் உடன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நன்றி ,விழுப்புரம் மாவட்டம், காமராஜர் மக்கள் கட்சி