மதுரை ஆதீன குரு முதல்வர் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் குருபூஜை விழாவில் திருமிகு தமிழருவி மணியன் அவர்களுக்கு திருமுருக கிருபானந்த வாரியார் விருது வழங்கியதற்கு தலைவர் அவர்களின் நன்றி கடிதம்
தெய்வசிகாமணி என்னும் இயற்பெயரை கொண்ட திருமிகு தமிழருவி மணியன் அவர்கள் எழுத்தாளர் பேச்சாளர் அரசியல்வாதி என்று நாடறிந்த பெருந்தகையாளர் ஆவார். சென்னை மாநிலக் கல்லூரியில் புவியியல் பயின்று பட்டம் பெற்று,பின்னர் கல்வியியல் சட்டம் ஆகியோற்றின் இளங்கலை பட்டம் பெற்றவர். சென்னை சூலைப் பகுதியில் அமைந்துள்ள இந்து ஒற்றுமை குழு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பல்லாண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற பின்பு ,சில காலம் வழக்கறிஞராக பணியாற்றினார்.
முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜர் அவர்களால் “தமிழருவி” என்று பாராட்ட பெற்றவர். அரசியல்வாதியாக பல பொறுப்புகளை ஏற்று பின்னர் காமராஜர் பெயரில் கட்சியினை தொடங்கி சமுதாய பணி ஆற்றி வரும் திரு .தமிழருவி மணியன் அவர்களுக்கு மதுரை ஆதீன குரு முதல்வர் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் குருபூஜை விழாவில் “திருமுருக கிருபானந்த வாரியார்” விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
நிகழ்வில் தலைவர் தமிழருவி மணியன் சார்பாக மதுரை மாவட்ட தலைவர் திரு அயல் ராஜ் அவர்கள் கலந்துகொண்டு விருது பெற்றுக் கொண்டார்.
தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் மதுரை ஆதீன தலைமைக்கு தனக்கு வழங்கப்பட்ட விருதுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.