காரைக்கால் புதிய பேருந்து நிலையம் இருசக்கர வாகனம் நிறுத்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்
காரைக்கால் புதிய பேருந்து நிலையம் சிக்னல் வடபுற பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் ஓரத்தில் காலை-மாலை இருவேளையும் இரண்டு சக்கரவாகனங்கள் அதிகமாக நிறுத்தப்படுகிறது.
காரைக்காலில் இரண்டுசக்கர வாகன பெருக்கம் மிகமிக அதிகமாக உள்ளது. ஆனால் அதற்கேற்ற வாகன நிறுத்த வசதிகள் கிடையாது.அதனால் சாலைகளில் முறையின்றி வாகனங்களை நிறுத்த வேண்டிய சூழ்நிலை வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுகிறது.
திருநள்ளார் ரோடு, மாதாகோயில் வீதி சந்திப்பிலிருந்து, மாதாகோயில் வீதி, பெருமாள் கோயில் வீதி சந்திப்பு வரை எந்நேரமும் போக்குவரத்து இடையூறு,புதிய பஸ் நிலையம் எதிரே (பாரதியார் வீதி) இரண்டுசக்கர வாகன நிறுத்த வசதியே கிடையாது.
மார்கெட் வீதி, மாதாகோயில் வீதி சந்திப்பிலிருந்து மார்கெட் வீதி, மாரியம்மன் கோவில் வீதி சந்திப்பு வரை இதே நிலை.வாகன நிறுத்தம் வசதி இல்லாத காரணத்தால் “NO PARKING” இடத்திலேயே வாகனங்களை நிறுத்த வேண்டிய நிலை உள்ளது.
பாரதியார் வீதி, திருநள்ளார் ரோடு சந்திப்பிலிருந்து திருநள்ளார் ரோடு, மாரியம்மன் கோயில் வீதி சந்திப்பு வரையும் வாகனங்களை நிறுத்த இடம் தேடும் நிலைதான்! நேரு மார்கெட் வாசல் பகுதியில் (திருநள்ளார் ரோடு) வாகன நிறுத்தத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை காரை நகராட்சி வாடகைக்கு விட்டு உள்ளது!.
வணிகவளாக கட்டிடங்களில் வாகனநிறுத்தத்திற்கு விடப்பட்ட இடங்களை கடைக்கு வாடகைக்கு விட, காரை நகராட்சியே முன் உதாரணமாக திகழ்கிறது.முதலில் முக்கிய வீதிகளில் உள்ள நடைப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பேருந்து நிலையத்திலிருந்து சிக்னல் வடபுறம் செல்லும் பேருந்து ஓட்டுனர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகுவதுடன், போக்குவரத்து இடையூறும் ஏற்படுகிறது போக்குவரத்து காவல்துறை கவனிக்க காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
நன்றி காமராஜர் மக்கள் கட்சி காரைக்கால்