காரைக்கால் புதிய பேருந்து நிலைய முக்கிய சந்திப்புகளில் இடதுபுற திருப்பங்களில் நெரிசலை குறைக்க காரைக்கால் காமராஜர் மக்கள் கட்சி மனு
26/06/2024 ,காரைக்கால்
காரைக்கால் புதிய பேருந்து நிலைய முக்கிய சந்திப்புகளில் இடதுபுற திருப்பங்களில் நெரிசலை குறைக்க இடதுபுறம் திரும்பும் இடங்களில் வாகனங்கள் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்ற விதியின் படி காரைக்கால் புதிய பேருந்து நிலையம் சிக்னலில் இலவச இடது திருப்பம் (Free Left) ஏற்படுத்தி வைத்து உள்ளது. அதை வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலையில் வாகனங்களை முறையின்றி நிறுத்துகிறார்கள் இதே நிலை தினமும் தொடர்கிறது.


அதனால் பெரும்பாலான இரண்டுசக்கர வாகன ஓட்டிகள் பேருந்து நிலையத்தை பொதுப்பாதையாக பயன்படுத்துகிறார்கள்,அது விபத்தை ஏற்படுத்தும். போக்குவரத்து காவல்துறை , வாகன ஓட்டிகள் இலவச இடதுபுற திருப்பத்தை பயன்படுத்த வசதி ஏற்படுத்தி தர வேண்டுகிறோம்.
பாதுகாப்பு அற்ற பகுதி காரைக்கால் காமராஜர் சாலை வடக்கு பகுதியில் ரயில்வே பணியும், புதிய கழிவுநீர் பாதை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது! ரயில்வே பணி நடக்கும் சாலை பகுதி போக்குவரத்திற்கு லாயக்கற்ற பகுதியாக உள்ளது. ஆங்காங்கே குழிகளை தோண்டி மண்மேடுகளாக போட்டு வைத்து இருக்கிறார்கள். கழிவுநீர் பாதை அமைக்கும் பணிக்கு கால்வாசி சாலையை ஆக்கிரமித்து உள்ளார்கள், ஏற்கனவே காமராஜர் சாலை குறுகிய நிலையில் உள்ளது, இன்னும் குறுகியது!.
அதனால் தொடர்ந்து போக்குவரத்து இடையூறு! பள்ளிநேரங்களில் சொல்ல வேண்டாம்! பள்ளி, அப்பகுதி வேலைக்கான கனரக வாகனங்களை தவிர மற்ற கனரக செல்ல தடை விதிக்க வேண்டுகிறோம், அப்பகுதி வேலை முடியும் வரை தடை விதித்தால் எவ்வித போக்குவரத்து இடையூறும் இல்லாமல் மக்கள் செல்வார்கள்.


இது சம்மந்தமாக குறை தீர்ப்பு கூட்டத்தில் காரைக்கால் காமராஜர் மக்கள் கட்சி மனு கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி, காரைக்கால் ,காமராஜர் மக்கள் கட்சி.