காரைக்கால் மாவட்டம் வடக்கு பகுதி எல்லைபுறம் பூவம் வளைவு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் காமராஜர் மக்கள் கட்சி வலியுறுத்தல்
21/06/2024 , காரைக்கால்
காரைக்கால் மாவட்டம் வடக்கு பகுதி எல்லைபுறம் பூவம் வளைவு, இவ்வழியே நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல வகையான வாகனங்கள் செல்லுகின்றன. இப்பகுதியில் மரக்கம்புகளுக்கு கருப்பு-வெள்ளை வர்ணம் பூசி கயிறுகளால் கட்டி வைத்து இருக்கிறார்கள், இது எப்படி பாதுகாப்பு ஆகும் என்பது கேள்வி குறி.அதனால் எந்த ஒரு பயனும் இல்லை.வளைவின் வடக்கு பகுதியில் கட்டி இருந்த கருப்பு-வெள்ளை வர்ணம் பூசிய கம்புகள் பாதிக்குமேல் சீர்குலைந்து உள்ளது. 2016 புயலின் போது சரிந்து விழுந்த ஹை-மாஸ் விளக்கு கம்பம் மீண்டும் நிறுவப்படாமல் போனது!! அப்பகுதி இருள் சூழ்ந்து உள்ளது, விபத்துக்களை தடுக்கும் விதமாக தடுப்பு சுவரும், மின் விளக்குகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.


காரைக்கால் காமராஜர் சாலையில் கழுவுநீர்பாதை கட்டும் பணியும், இரயில்வே பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது! அதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து இடையூறு! காமராஜர் சாலையில் இப்பணிகள் நிறைவுபெறும் வரை அவ்வேலைக்கான வாகனங்கள், பள்ளிவாகனங்களை தவிர மற்ற கனரக வாகனங்கள் தடை விதிக்க வேண்டும்.

காரைக்கால் திருநள்ளார் ரோடு கலியன் கட்டிய மதகு தென்புறம் வாஞ்சியாற்றின் கரை ஓரத்தில் ஏறக்குறைய 50க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன.காரைநகர் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.
50க்கும் மேற்பட்ட குடிசைகள் உள்ள பகுதியில் ஒரே ஒரு பொது குடிநீர் குழாய்! சில நேரங்களில் தண்ணிர் வரத்தும் இருக்காதாம்,! காலைக்கடனை முடிக்க எப்பொழுது இரவு வரும் என காத்து இருக்க வேண்டும் அவசர தேவைக்கு துணையுடன் புதர் மண்டிய இடங்களை தேட வேண்டிய அவலநிலை. பொதுக்கழிப்பிடம் கட்டிக்கேட்டு பல முறை புகார் செய்தும் இது நாள்வரையில் பலன் இல்லை! அப்பகுதி மக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.


நன்றி, காரைக்கால், காமராஜர் மக்கள் கட்சி.