சென்னை விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் காமராஜர் மக்கள் கட்சி கள ஆய்வு பணிகள்
8/06/2024; சென்னை;
காமராஜர் மக்கள் கட்சி சார்பாக சென்னை மாவட்டம் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு எண் 128 வார்டு எண் 127 வார்டு எண் 129 பகுதிகளில் பராமரிப்பு சமூகப் பணி 2024 கடந்த மாதம் மே 6ஆம் தேதியிலிருந்து தேவி கருமாரியம்மன் கோவில் தெரு, வார்டு 127,வார்டு எண் 128 மற்றும் 129 பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஆய்வின் அடிப்படையில் பொதுமக்களுக்கு பாதிப்பு தரக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ள பணிகளை மாநகராட்சிக்கும் , முதலமைச்சர் தனிப்பிரிக்கும் பாதிப்புகளை சுட்டிக்காட்டியும் வீதிகளில் உள்ள அவல நிலை குறித்தும் மனு கொடுக்கப்பட்டது.
மனு கொடுப்பதற்கு முன் புகைப்படம் -1 , புகைப்படம் -2
காமராஜர் மக்கள் கட்சி மனு அடிப்படையில், நாம் சுட்டிக் காட்டிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் தொய்வான நிலையிலும் நடந்துள்ளது.
நமது காமராஜர் மக்கள் கட்சி விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 127 128 129 பகுதியில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையின் படி புகைப்படங்கள்
நன்றி சென்னை மாநகராட்சி ,தகவல் தொழில்நுட்ப அணி, காமராஜர் மக்கள் கட்சி