போலி மதுபான ஆலை குற்றவாளிகளை சி பி .சி .ஐ. டி தீவிர விசாரித்து தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும் காமராஜர் மக்கள் கட்சி
24/06/2026, சிவகங்கை;
சிவகங்கை மாவட்டம் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக 24/06/2024 திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் கூட்டத்தில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, சிங்கம்புணரி ஒன்றியம் ,குமத்தம்பட்டி கிராமத்தில் மே மாதம் போலி மதுபான ஆளை கண்டுபிடிக்கப்பட்டு அதிலுள்ள பொருட்களை கைப்பற்றப்பட்டது.


ஆனால் இது எந்தெந்த கடைக்கெல்லாம் சப்ளை செய்யப்பட்டது யார் யாரெல்லாம் தொடர்பு என வெளிக்கொண்டு வரவில்லை மதுவிலக்கு போலீஸ் ,அது சார்பாக 10 லட்சம் மதிப்புள்ள பொருட்களுடன் போலி மதுபானங்களை கண்டுபிடிக்கப்பட்டு இரண்டு பேர் மற்றும் கைது செய்யப்பட்டது, இதில் நிறைய தவறுகள் நடந்திருக்கின்றன, ஒரு குற்ற செயலை அரசியல் பின்னணி இல்லாமல் செய்திருக்க முடியாது என கருதி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இந்த இந்த போலி மதுபான ஆலையை நடத்திய குற்றவாளிகளை சி பி .சி .ஐ. டி .தீவிர விசாரித்து தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்ய வேண்டும் என காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மனு கொடுக்கப்பட்டது.
மாவட்ட தலைவர் அ . அருளானந்து, மாவட்ட பொதுச் செயலாளர் மா. பிரபாகரன்,திருப்பத்தூர் தொகுதி செயலாளர். எம் நாகவல்லி, காரைக்குடி மகளிர் அணி தொகுதி செயலாளர்,M மகாலட்சுமி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் மாரியம்மாள்,ஏ சோலையம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.


