மாவட்டம் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக காந்திய வழியில் மௌன போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு
23/06/2024, சிவகங்கை
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய துயர சம்பவம் வழி எண்ணிக்கை 59 உயர்வை கண்டித்தும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டி சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மௌன போராட்டம் நடத்த காவல்துறைக்கு மனு கொடுக்கப்பட்டது.
காந்தியடிகள் சிலை முன்பு இரண்டு மணி நேர மௌன போராட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டு, பலதரப்பட்ட முனைகளில் மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் அனுமதி மறுப்பும் நடைபெற்றது.
அகிம்சை வழியில் காந்தி வழியில் மௌனமாக மக்களை நல்வழிப்படுத்தும் செயல்பாடுகளுக்கும் கூட தமிழ்நாட்டில் அனுமதி இல்லை என காமராஜர் மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
திராவிட மாடல் அரசின் மது ஆலைகளுக்கு அனுமதி , மது பிரியர்களுக்கு மது குடிப்பதற்கு அனுமதி, இது எல்லாம் நகைப்புக்குரியதாக உள்ளது என பலதரப்பட்ட மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
நன்றி ,சிவகங்கை .