காரைக்காலில் பொது சுகாதாரம் போக்குவரத்து நெரிசல் கண்டித்து காமராஜர் மக்கள் கட்சி மனு
காரைக்கால் அரசு பொது மருத்துவ மனை அருகில் (Drஅம்பேத்கர் வீதி)உள்ள கழிவுநீர் வடிவாய்க்கால் நீண்ட காலமாக தூர்வாராத காரணத்தால் அப்பகுதி முழுவதும் உள்ள கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி கேந்திரமாக திகழ்கிறது! ஆள் உயரத்திற்கு கோரைப்புல்கள் வளர்ந்து நிற்கிறது,! இதன் தொடர்பு வாய்க்கால் தோமாஸ் அருள் வீதியிலும் இதே நிலை! மலேரியாவை ஒழிப்போம்!
டெங்குவை ஒழிப்போம்! என விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினால் போதாது!! இது போல் தேங்கி நிற்கும் கழிவுநீர் பகுதிகளை சுத்தம் செய்வதில் அரசு அதிகாரிகள் ஆர்வம் காட்ட வேண்டும்!! பொதுப்பணி துறை அதிகாரிகள் முழுகவனம் செலுத்தி அப்பகுதிகளை உடன் தூர்வார நடவடிக்கைகள் வேண்டியும்,



காரைக்கால் அரசு பொது மருத்துவமனை அருகில் (Drஅம்பேத்கர் வீதி)உள்ள கழிவுநீர் வடிவாய்க்கால் நீண்ட காலமாக தூர்வாராத காரணத்தால் ,அப்பகுதி முழுவதும் உள்ள கழிவுநீர், தேங்கி கொசு உற்பத்தி கேந்திரமாக திகழ்கிறது. ஆள் உயரத்திற்கு கோரைப்புல்கள் வளர்ந்து நிற்கிறது.
இதன் தொடர்பு வாய்க்கால் தோமாஸ் அருள் வீதியிலும் இதே நிலை! மலேரியாவை ஒழிப்போம்! டெங்குவை ஒழிப்போம்! என விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினால் போதாது!! இது போல் தேங்கி நிற்கும் கழிவுநீர் பகுதிகளை சுத்தம் செய்வதில் அரசு அதிகாரிகள் ஆர்வம் காட்ட வேண்டும். பொதுப்பணி துறை அதிகாரிகள் முழுகவனம் செலுத்தி அப்பகுதிகளை உடன் தூர்வார நடவடிக்கைகள் எடுக்க வேண்டியும்,
சுவச்ச பாரத் அபியான் (Swachh Bharat Abhiyan) திட்டத்தின் கீழ் சில ஆண்டுகளுக்கு முன்பு நடமாடும் கழிப்பறை வாகனம் ஒன்று சுற்றுலா துறை மூலம் காரைக்கால் நகராட்சிக்கு வந்தது! அதன் மதிப்பு ஏறக்குறைய 5லட்சத்தை தாண்டும்.
அவ்வாகனம் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் தற்போது காந்தி பூங்கா திடலில் மண்ணுக்கு இரையாகும் நிலையை தேடி அனாதையாக நிற்கிறது! அதில் சிறிதும் தேய்மானம் இல்லாத நான்கு டயர்கள் பாதுகாப்பின்மையால் சமூக விரோத கும்பலால் திருட்டு போகும் அவலநிலையில் உள்ளது!! இதைப்போல் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ஏறக்குறைய 20லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள பாப்காட் (Bobcot)என்ற குட்டி ஜேசிபி வாங்கப்பட்டது, அதற்கும் இதே பராமரிப்பு இல்லாத அவலநிலை தான்! அது தற்போது எந்த குப்பைமேட்டில் உறங்குகிறதோ,நகராட்சி நிர்வாகமே! பழுதடைந்த நடமாடும் கழிப்பறை வாகனத்தை பழுதுநீக்கி மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டியும்,

காரைக்கால் இரயில் நிலையம் இங்கு இரயில்வந்து செல்வதற்கு மட்டும் கேட்டை மூடுவதல்லாமல் ஒவ்வொரு முறை இரயில்எஞ்சின் மாறுவதற்கும் கேட்டை மூடும் நிலை! எஞ்சின் மாறுவதற்கான வசதியை இரயில் நிலையம் வடக்கு பகுதியில் ஏற்படுத்தி கொண்டால் கேட் முடுவதற்கான எண்ணிக்கை குறைவாகும்! மூடியிருக்கும் கேட் பகுதியில் வாகனங்களை நிறுத்தும் மக்கள் வரைமுறை இன்றி நிறுத்துவதால் தினம் தினம் போக்குவரத்து இடையூறு வாகன ஓட்டிகள் நிலையறிந்து வாகனங்களை நிறுத்த வேண்டியும், காமராஜர் மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.
