மக்கள் நலத்திட்டங்களுடன் காமராஜர் மக்கள் கட்சி தமிழகம் முழுவதும் 122-வது காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
விருதுநகர் ரோட்டரி சங்கம் சார்பாக 122-காமராஜர் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்கள் கலந்து கொண்டார். விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள காமராஜர் காட்சியகம் சென்று அங்கு உள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். காமராஜர் காட்சியகத்தின் நிறுவனர் திரு எஸ் பி கணேசன் மற்றும் அவரது நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் காமராஜர் வரலாறு மற்றும் சாதனைகள் பற்றிய கருத்தரங்கத்தில் தலைவர் திரு தமிழருவி மணியன் சிறப்புரை ஆற்றினார். விழாவில் ஐயா அவர்களுக்கு காமராஜர் சிறப்புகள் அடங்கிய புத்தகத் தொகுப்பு பரிசாக வழங்கப்பட்டது.தலைவர் பேச்சை கேட்பதற்காக 250க்கும் மேற்பட்ட மக்கள் திடலில் ஒன்று கூடினர்.
15/07/2024 திருச்சியில் மாலை 4 மணி அளவில் மாபெரும் பொதுக்கூட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக நடைபெற்றது.தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் திரு ஜி கே வாசன் ஐயா அவர்கள் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் திரு.தமிழருவி மணியன் அவர்கள் திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் காமராஜரின் வரலாற்று பெருமைகள் சாதனைகள் பற்றி பேசினார்.
கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள், பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் திரு அண்ணாமலை, பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மருத்துவர் அன்புமணி ராமதாசு,அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற தலைவர்களுக்கு நினைவு பரிசு காமராஜர் சிலை வழங்கப்பட்டது.
தி நகரில் அமைந்துள்ள காமராஜர் நினைவு இல்லத்திற்கு காமராஜர் மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் சென்னை மாவட்ட நிர்வாகிகள் என திரளாக கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். காமராஜர் நினைவு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
தென் சென்னை மாவட்ட தலைவர் திரு.வாசு அவர்கள் தலைமையில் காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. தி நகரில் உள்ள தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
பெருந்தலைவர்காமராஜர் அவர்களின்122 வது பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி,49வது வார்டு,
பத்மினி கார்டன் பகுதியில்,திரு. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில்,திரு. சுரேஷ் குமார் (மாநில கொள்கை பரப்பு செயலாளர்) மற்றும்மாவட்ட நிர்வாகிகள்திரு. வெள்ளியங்கிரி,திரு. சுதாகர்,திரு.ரஞ்சித் குமார் , திரு.சக்திவேல் ஆகியோர் முன்னிலையில்,மாநகர தலைவர்திரு.கருப்பசாமி அவர்கள் காமராஜர் மக்கள் கட்சியின் கொடியினை ஏற்றி சிறப்பித்தார்.மகளிர் அணி பொருப்பாளர்கள் திருமதி. சரோஜா,திருமதி. தவமணி ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
மேலும் கட்சியின் மாநகர, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் மாணகிரியில் காமராஜர் பிறந்தநாள் விழாவில் காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்ட தலைவர் திரு அருளானந்து அவர்கள் தலைவர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செய்தார் உடன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காரைக்காலில் பெருந்தலைவர் கு.காமராஜர் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் தலைவர் சிலைக்கு “காமராஜர் மக்கள் கட்சி” சார்பாக மலர்மாலை அணிவிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரத் தலைவர் கே. பாலு அவர்கள் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் வைத்து பிஸ்கட் வழங்கி காமராஜரின் பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் வல்லாஞ்சேரி அரசு ஆரம்ப பள்ளியில் கர்மவீரர்காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவர்கள் காமராஜ் புகழ்பாடினர். மாவட்டத் தலைவர் திரு ரகுபதி அவர்கள் தலைமையில் இனிப்புகள் வழங்கப்பட்டது.நம் இயக்க நண்பர் திரு சுரேஷ் அவர்கள் மாணவர்களுக்கு கடலை (இனிப்பு) மிட்டாய் வழங்கினார் .
திருவண்ணாமலை மாவட்டத்தில் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக காமராஜரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. மாவட்டத் தலைவர் மற்றும் மாநில செயலாளர் திரு ஜெயகாந்தன் கலந்து கொண்டார்.
நீலகிரி மாவட்டத்தில் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மகளிர் அணி மாநில தலைவர் திருமதி வள்ளி ரமேஷ் அவர்கள் தலைமையில் பரிசுகள் வழங்கியும் இனிப்புகள் வழங்கியும் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் அய்யா தமிழருவி மணியன் அவர்கள் எழுதிய பெருந்தலைவர் காமராசர் பொற்கால ஆட்சி சாதனைகள் புத்தகம் மதுரையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள்& தலைமை ஆசிரியர் தென்னவன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாவட்ட தலைவர் திருமாறன் அவர்கள் தலைமையில் மாநில செயலாளர் திரு தியாகராஜன் முன்னிலையில் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக தலைவர் காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது கட்சியின் பிற நிர்வாகிகள் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கியும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கி விழாவை சிறப்பித்தனர்.
மதுரை மாவட்ட தலைவர் திரு அய்யல்ராஜ் அவர்கள் தலைமையில் இளைஞர் அணி மற்றும் பிற அணி நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியங்கலம் தாலுக்கா மாக்கிணாங்கோம்பை கிராமத்தில் காமராசர் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.