காவிரி வைகை குண்டாறு விரைவில் இணைப்பு திட்டம் செயல்படுத்த வேண்டும் திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
17/08/2024,திருச்சி
1958 ஆண்டில் காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு ரூபாய் 189 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது அப்போதைய முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த திட்டம் செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டது. பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு பின்னால் வந்த முதல்வர்களான திரு கருணாநிதி, செல்வி ஜெயலலிதா, திரு எடப்பாடி பழனிசாமி ஆகியோரால் இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படுவதும் நிதி ஒதுக்கப்படுவதும் என்று காலம் கடந்து கொண்டே இருக்கிறது.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என காமராஜர் மக்கள்கட்சி பொதுமக்களிடையே விழிப்புணர் ஏற்படுத்தவும் , அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும், திருச்சி மாவட்டத்தில் திருச்சி மையப்பகுதியான ரயில்வே நிலையத்திற்கு அருகே 17/8/2024 மாபெரும் ஆர்ப்பாட்டத்தினை நடத்தியது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம் ஏழு மாவட்டங்கள் பயன்பெறும் எனவும் இப்ப பயன்பாட்டினை செயல்படுத்த தயக்கம் காட்டுவது ஏன் என நிர்வாகிகள் மோச முழக்கங்களையும் தங்கள் கருத்துக்களையும் பொதுமக்கள் முன்னிலையில் எடுத்துரைத்தனர்.
காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஏழு மாவட்டங்கள் விவசாய நிலங்கள் எவ்வாறு பயனடையும் என துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.