காரைக்கால் எல்லை பூவம் பகுதியில் வளைவு இருளில் மூழ்கி கிடைக்கிறது
2/9/2024
காரைக்கால் எல்லை பூவம் பகுதியில் இருபுறமும் அமைந்துள்ள அலங்கார வளைவில் ஒரு பகுதியில் மட்டுமே மின் விளக்குகள் எரிகிறது. மேற்கு பகுதியில் உள்ள வளைவு இருளில் மூழ்கி கிடைக்கிறது.அதன் அருகில் உள்ள போக்குவரத்து வளைவு இருளடைந்து இருக்கிறது.
காரைக்காலுக்கு சுற்றுலா பயணிகள் வர வேண்டும் என எதிர்பார்க்கும் மாவட்ட நிர்வாகம் எல்லைப்பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் நமது கலாச்சாரத்தை மற்றும் பண்பாட்டை பறைசாற்றும் விதத்தில் நினைவு சின்னங்களை அமைத்து தொடர்ந்து பராமரித்து வர வேண்டும்.
ஆனால் நமது எல்லை பகுதிகளில் வண்ணவண்ண அலங்கார மின் விளக்குடன் மதுக்கடைகள் தான் வரவேற்கிறது.
மற்ற சாலை பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளது, சுற்றுலா பயணிகளின் அத்தியாவசிய தேவைகளையாவது பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது.