காரைக்கால் பகுதியில் தொடர்ந்து மின்வெட்டு மக்கள் தவிப்பு
8/09/2024
காரைக்கால் பிள்ளைத் தெருவாசலில் உள்ள இணை மின் நிலையத்திலிருந்து காரைக்கால் நகர் வரும் மெயின் கேபிள் வழித்தடத்தில்,
காரைக்கால் முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டது.
மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் பல மணி நேரம் மின் ஏற்பட்டதால் வெட்டி ஏற்பட்டதால் வயதானவர் குழந்தைகள் மீது மிகவும் அவதிக்குள்ளானார் அவதிக்கு உள்ளானார்கள். இது போன்ற செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறக் கூடாது என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின் இணைப்பு வராமல் காரைக்கால் நகர பகுதியில் பாதி இருளில் மூழ்கியது. ஜெனரேட்டர் வசதி உள்ள வியாபார ஸ்தலங்கள் தவிர அனைத்து கடைகாரர்களும் பெரும் அவதிக்கு உள்ளானார்கள், வீடுகளில் குழந்தைகள், நோய்யுற்றவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“காரைக்கால் அருகில் பிள்ளை திருவாசல் இணை மின் நிலையத்திலிருந்து காரைக்கால் நகர் வரும் முதன்மை கேபிள் வழித்தடத்தில் ரயில்வே பணிக்காக மண் தோண்டும் போது கேபிள் துண்டிக்கப்பட்டதே காரணம்” என்றார்கள்!
முதன்மை மின் கடத்தி கேபிள் செல்லும் வழியில் “மின் துறை அனுமதியோ, ஆலோசனையோ கேட்காமல் அப்பகுதியில் தோண்டுவது குற்றச்செயல் என்பது ஒப்பந்தகாரருக்கு தெரியாதா? அப்படி என்ன அலட்சிய செயல்! அவர் மீது மின் துறை நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பொதுப்பணி துறை, தொலைபேசி நிர்வாகம், தனியார் நிர்வாகம் ,பொதுப்பணி துறை, தொலைபேசி துறை, மின் துறை, நகராட்சி நிர்வாகம் உயர் அதிகாரிகளின் அனுமதியும் ஆலோசனையும் பெற்ற பிறகே வேலை தொடங்க வேண்டும். அப்படி மீறி செயல்படுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயர் மின் அழுத்தம் செல்லும் பாதை, முதன்மை குடிநீர் குழாய் இருக்கும் பகுதிகளில் அடையாளங்கள் வைக்க வேண்டும் என காமராஜர் மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.
நன்றி, இஸ்மாயில் – காரைக்கால்