சிவகங்கை மாவட்ட தலைமை மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லை என்று கூறி மனு
2.9.2024
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் 2.9.2024 இன்று திங்கள்கிழமை குறைதீர் கூட்டத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா சங்கராபுரம் ஊராட்சியில் அமைந்திருக்கும் மாவட்ட தலைமை மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லை என்று கூறி மனு கொடுக்கப்பட்டது.
பிரசவத்திற்காக வந்த பெண்களை திருப்பி அனுப்பி சிவகங்கை மருத்துவமனைக்கு செல்லுங்கள் கூறுவதால் கர்ப்பிணிகளுக்கு என்ன செய்து என்று தெரியாமல் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்ட தலைமை மருத்துவமனை இருந்தும் போதிய வசதிகள் இல்லை. மருத்துவர் இல்லை செவிலியர் விரைவில் நியமனம் செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக இன்று 2.9.2024 மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அவர்களும் கூடிய விரைவில் போதுமான வசதிகள் செய்து தரப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டார். வந்த காமராஜர் மக்கள் கட்சி நிர்வாகிகள் மாவட்டத் தலைவர் அருளானந்து.. மாவட்ட பொருளாளர் சம்பத்.. தொழிற்சங்க செயலாளர் திருத்துறை பாண்டி.. மாற்றுத்திறனாளி நல பிரிவு செயலாளர் நந்தகுமார்.. மகளிர் அணி நிர்வாகி டி பாக்கியலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நன்றி சிவகங்கை, காமராஜர் மக்கள் கட்சி