நல்லோர் வட்டம் இயக்கத்தின் கருத்தரங்கில் காமராஜர் மக்கள் கட்சி நிர்வாகிகள்
14/09/2024
நல்லோர் வட்டம் இயக்கத்தின் சார்பாக திண்டுக்கல்லில் கடந்த செப்டம்பர் மாதம் 14 , 15 2024 நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் கருத்தரங்கில் காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதில் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் அரசியலில் மக்களுக்கு செய்யும் சேவை ,மத்திய, மாநில அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்தும் விதம், மக்களை கண்டறிதல்,
மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்தல் என பல்வேறு கருத்தரங்கங்கள் நடைபெற்றது. கருத்தரங்கத்தில் காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக கலந்து கொண்ட உறுப்பினர்கள் சிறப்பாக பிரதிவாதங்களை முன்வைத்தும் தங்களுக்கான செயல்பாடுகளை விளக்கியும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.