பல்வேறு துறைகளில் பின்தங்கி இருக்கும் தென் தமிழக மாவட்டங்களின் வளர்ச்சியை வேகப்படுத்திட, மண்டல வளர்ச்சி வாரியத்தை ஏற்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காமராஜர் மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
7/09/2024
அன்புடையீர்! வணக்கம்,
திருச்சியில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடத்திய பின்பு, தற்போது வேலை வாய்ப்பு, தொழில், போக்குவரத்து, நீர்ப் பாசனம், சுற்றுலா, ஏற்றுமதி என்று பல்வேறு துறைகளில் பின்தங்கி இருக்கும் தென் தமிழக மாவட்டங்களின் வளர்ச்சியை வேகப்படுத்திட, மண்டல வளர்ச்சி வாரியத்தை ஏற்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வரும் 21 09 2024 சனிக்கிழமை காலை மிகச் சரியாக 10:30 மணிக்கு காமராஜர் மக்கள் கட்சி சார்பாக, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
தாங்களும், தங்கள் பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் தவறாமல் கலந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தினை வெற்றி பெறச் செய்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி, பொதுச் செயலாளர், காமராஜர் மக்கள் கட்சி