சமூக விரோத செயலுக்கு தூண்டுகோலாக விளங்கும் இடமாக மாறுகிறதா காரைக்கால்
20/11/2024
காரைக்கால் வ உ சி சாலை,பி கே சாலை சந்திப்பு வாகன போக்குவரத்து மிகுந்த சாலை.இங்கே உள்ள ஹை-மாஸ் விளக்கு நீண்ட காலமாக எரிவதில்லை.
சமூக விரோத செயலுக்கு தூண்டுகோலாக விளங்கும் இடமாக திகழ்கிறது.நாகை வழியே செல்லும் அனைத்து பேருந்துகளும் இவ்வழியே தான் செல்கிறது! இருளடைந்து இருப்பதால் இரண்டு மற்றும் நான்கு சக்கரவாகனத்தில் செல்ல கூடியவர்கள் அவதிக்குள்ளாகிறர், சிதிலமடைந்த ரோட்டின் மேடு, பள்ளங்கள் இருளில் தெரிவதில்லை.
அப்பகுதியில் குடிசை மாற்று வாரிய கட்டிடங்கள் உள்ளது அங்குள்ள மக்கள் இருளில் அவ்வழியே செல்ல அச்சப்படுகிறார்கள், அந்த இருள் சமூக விரோத செயலுக்கு உகந்த இடமாக மாறி வருகிறது.
பொதுப்பணி துறை நிர்வாகம் ஹை-மாஸ் விளக்கை பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகள் எடுக்க காமராஜர் மக்கள் கட்சி வேண்டுகோள் வைக்கிறது.