திருப்பூர் புறநகர் மாவட்டத் தலைவராக திரு இராஜேந்திரன்அவர்கள் நியமனம்
15/11/2024
தமிழ்நாடு மாநிலத்திலுள்ள திருப்பூர் மாவட்டத் தலைமையிடமும், மாநகராட்சியும் ஆகும். இது 160 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. இம்மாநகரம் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது. சமீபத்தில் நடந்த ஆய்வில் இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. பின்னலாடை தொழிலில் உலகின் பெரும்பாலான நாடுகள் இந்நகரையே நம்பி உள்ளன. கொங்கு நாட்டில் அமைந்துள்ள இந்த நகரம் ஆரம்ப காலத்தில் சிறு கிராமமாக இருந்து, இன்று தேசிய அளவில் பின்னலாடை தொழிலில் அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது. திருப்பூர் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
திருப்பூர் மாநகராட்சியுடன் வேலம்பாளையம், எஸ்.நல்லூர் ஆகிய மூன்றாம் நிலை நகராட்சிப் பகுதிகளும், தொட்டிபாளையம், ஆண்டிபாளையம், வீரபாண்டி, செட்டிபாளையம், மண்ணரை, முருகன்பாளையம், நெருப்பெரிச்சல், முத்தனம்பாளையம் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன. திருப்பூரின் முக்கியச் சாலைகளாகக் குமரன் சாலை, அவிநாசி சாலை, பெருமாநல்லூர் சாலை, காங்கேயம் சாலை, பல்லடம் சாலை, மங்கலம் சாலை, ஊத்துக்குளி சாலை, தாராபுரம் ஆகிய பகுதிகள் உள்ளன.
திருப்பூர் ஆனது சங்க காலத்தில் சேரர்களால் ஆளப்பட்ட கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. இப்பகுதி இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளை இணைக்கும், ஒரு முக்கிய ரோமானிய வர்த்தக பாதையின் ஒரு பகுதியாக இருந்தது. 10 ஆம் நூற்றாண்டில் இடைக்கால சோழர்கள் கொங்கு நாட்டை கைப்பற்றினர்.
பின்னர் இப்பகுதி 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு ஆட்சியின் கீழ் வந்தது. பின்னர் பாளையக்காரர்கள், மதுரை நாயக்கர்கள் இப்பகுதியை ஆட்சி செய்தனர். பின்னர் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மதுரை நாயக்கர்களுடன் தொடர்ச்சியான போர்களைத் தொடர்ந்து, இப்பகுதி மைசூர் இராச்சியத்தின் கீழ் வந்தது. ஆங்கிலோ-மைசூர் போர்களில், திப்பு சுல்தானின் தோல்விக்குப் பின்னர், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் 1799இல், இப்பகுதியை சென்னை மாகாணத்துடன் இணைத்தது. திருப்பூர் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
காமராஜர் மக்கள் கட்சியின் திருப்பூர் புறநகர் மாவட்டத் தலைவராக திரு சி இராஜேந்திரன் (C Rajendran – 99651 97580) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.