எளிமையின் சிகரமும் ஏழை மக்களின் மனசாட்சிமாக வாழ்ந்த அமைச்சர் கக்கன்

23/12/2024

கக்கன் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரை பொறுப்பு வகித்தார்.காமராசர் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்கும் பொருட்டு தான் வகித்து வந்த தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டி) தலைவர் பதவியை விட்டு விலகியபொழுது கக்கன் அந்தப் பதவியை ஏற்றார்.

1957 இல் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று மதராஸ் மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. கக்கன் பொதுப்பணித்துறை, ஆதிதிராவிடர் நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளின் அமைச்சராக ஏப்ரல் 13, 1957 இல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மார்ச் 13, 1962 முதல் அக்டோபர் 3, 1963 வரை விவசாயத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். ஏப்ரல் 24, 1962, முதல் வணிக ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். அக்டோபர் 3, 1963 அன்று மாநில உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று 1967 வரை அப்பொறுப்பிலிருந்தார்.

நேர்மையும் உண்மையும் எளிமையுமாக இருந்த மாபெரும் அமைச்சர் திரு கக்கன் ஐயா அவர்களின் நினைவை 23/ 12.. போற்றுவோம்.

அவர் வழி நடப்போம் . எளிமை அரசியலை தமிழகத்தில் முன்னெடுப்போம்.

நன்றி ,காமராஜர் மக்கள் கட்சி ,தகவல் தொழில்நுட்ப அணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *