சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகத்திற்கும் ஒன்றியத்திற்கும் காமராஜர் மக்கள் கட்சி கண்டனம்
21/12/2024, சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை பேருந்து நிலையம் மத்திய பகுதியில் அமைந்துள்ள சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், வாணியம் குடி பஞ்சாயத்து, சீனிவாசன் நகர் ஆறாவது வீதியில் ,மழை நீர் தேங்கியும் சாக்கடை கழிவுநீர் வெளியேறாமல் தேங்கியும், மக்களுக்கு சுகாதாரத் கேடு கொசு உற்பத்தி, தெரு நாய்கள் உயிரிழப்பு என பல்வேறு பாதிப்புகள் மூலம் வீடுகளில் இருக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மிகப்பெரும் சுவாச பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதை வ காமராஜர் மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது .
மக்கள் நலனில் கருத்தில் கொண்டு மக்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கவே வேண்டும் என சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகம் என அரசு அலுவலர்களுக்கு தொலைபேசி வாயிலாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி தகவல் தெரிவித்ததன் காரணமாக அப்பகுதியில் மாவட்ட பஞ்சாயத்து (A. D )மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு துர்நாற்றம் வீசிய பகுதிகளில் நடவடிக்கை எடுத்து சுகாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
மேலும் நீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க மாவட்ட பஞ்சாயத்து தனது பணிகளை தொடங்கியுள்ளது.
நன்றி ,தகவல் தொழில்நுட்ப அணி, காமராஜர் மக்கள் கட்சி