தலைவர் 77-பிறந்தநாள் திருப்பூர் மாநகரில் முப்பெரும் பணிகள்
20/12/2024
தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூரில் முப்பெரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் ஆரோக்கியத்துடன் வாழ கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடு செய்யப்பட்டது.
தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூரில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
10.30 மணிக்கு திருப்பூர் K செட்டிபாளையம் அரசு பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அரசு தலைமை மருத்துவனை முன்பு சிகிச்சைக்கு வருபவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு 200 நபர்களுக்கு உணவு பொட்டலம் இனிப்பு வழங்கப்பட்டது.
விழாவில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் க சுரேஷ்குமார் மாநகரத் தலைவர் கருப்பசாமி.மாவட்ட தலைவர் C ராஜேதிரன் வடக்கு தொகுதி தலைவர் K VT வெள்ளியங்கிரி மற்றும் கட்சி நிர்வாகிகள் சுதாகர் சேகர் சக்திவேல் ராஜா, செல்வம், மணிராஜ் பொன்னுச்சாமி பாலமுருகன் மரம் ஐயப்பன் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஐயா அவர்களின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.