கடற்கரை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா அம்சமாக விளங்கும் காரைக்கால் ஏ டி வி வாகன (All Terrain Vehicle- ATV) வசதி ஏற்படுத்தி கொடுக்க காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை
16/01/2025
காரைக்கால் கடற்கரை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா அம்சமாக விளங்குகிறது.விடுமுறை நாட்களிலும், பண்டிகை தினங்களிலும், காரைக்கால் மக்கள் மட்டுமல்லாது, அண்டை மாநிலத்திலிருந்து சுற்றுலா பயணிகள் வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடற்கரையில் பெரும்பாலும் வெளி மாநிலத்திலிருந்து வரும் இளைஞர்கள் உயிர் பலி தொடர்ந்து நடந்து வருகிறது.
கடலோர காவல் துறையினர் “கடலில் குளிக்க வேண்டாம், ஆபத்தானது” என்ற வாசகத்துடன் எச்சரிக்கை பலகை வைத்து இருந்தாலும், அதை “சிகரெட் பாக்கெட் மேல் அச்சிடப்பட்டு இருக்கும் “புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது” அது போல் மதுக்கடை பெயர் பலகையில் “குடி குடியை கெடுக்கும், குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு” என்று போட்டு அரசே விற்பனை செய்வது போல “கடலில் குளிக்க வேண்டாம், ஆபத்தானது” என்ற வாசகமும் ஏதோ சம்பிரதாயத்திற்கு போடப்பட்டது என நினைத்து ஆர்வ மிகுதியில் கடலில் இறங்கி சிக்கி உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.

கடலோரகாவலர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் குறுகிய பகுதியை மட்டுமே தீவிர பாதுக்காப்பில் ஈடுப்பட்டு கடலில் குளிப்பவர்களை ஒழுங்குப்படுத்த முடிகிறது!
நீண்ட தூரத்தில் கடலில் இறங்குபவர்களை போதுமான வசதிகள் இல்லை.
கடலில் இறங்குபவர்களை கண்காணித்து கட்டுப்படுத்த காவலர்களுக்கு கடற்கரை மணல் பரப்பிலும்,கரடுமுரடான பகுதியிலும், தார் சாலையிலும் எளிதில் செல்லக்கூடிய ஏ டி வி வாகன (All Terrain Vehicle- ATV) வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டுகிறோம்.
