சாலையை முறையாக தரமாக செப்பனிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் எடுக்க காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை
19/01/2025
காரைக்கால் கார்னிவல் திருவிழாவில் ‘மாராத்தான் ஓட்ட பந்தயம் நடப்பது வழக்கம்.சாலையில் தொடர்ந்து நெடுந்தொலைவு ஓடும் போட்டியே “மாராத்தான்” ஆகும்!
காரைக்காலில் அப்போட்டிக்கு பயன்படுத்தும் சாலைகளில் காமராஜர் சாலையும் ஒன்று. தற்போது காமராஜர் சாலை குண்டும்குழியுமாக உள்ளது.
அதை செப்பனிடுதல் என்ற பெயரில் மண்கலந்த ஜல்லியை கொட்டி வருகிறார்கள்! கனரக வாகனங்கள் செல்லும் பகுதியாக இருப்பதால் வாகன வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஜல்லிகள் சிதறி சாலை முழுவதும் பரவி கிடக்கிறது.

இது இரண்டு சக்கரவாகனத்தில் செல்பவர்களுக்கு விபத்தை ஏற்படுத்துகின்றன.இச்சாலையில் மாராத்தான் பந்தயத்தில் ஓடுபவர்கள் தடுக்கி தவறி கிழே விழும் நிலை ஏற்படும்.
கார்னிவல் திருவிழாவிற்கு முன் அச்சாலையை முறையாக தரமாக செப்பனிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் எடுக்க காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை வைக்கிறது.