தலைமை அலுவலகத்தில் காந்தி நினைவு நாள் மரியாதை

30/01/2025

அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948 இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் “விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி, பிர்லா பவனில் நடைபெறவிருந்த பிரார்த்தனைக் கூட்டத்திற்கு சென்றபோது, நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். காந்திக்கு வயிற்றிலும் மார்பிலும் மூன்று முறை சுட்டப்பட்டார். 

மகாத்மா காந்தி 1948 ஜனவரி 30ஆம் தேதி மாலை நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் படுகொலை என்று கூறப்படுகிறது. 1934 ல் இருந்து தொடர்ந்து 5 முறை அவரை கொலை செய்ய முயன்று தோற்று , 6 வது முறை அவர் கொலை செய்யப்பட்டார்.

காந்திஜி இந்திய விடுதலைக்கும், சமூக நீதியை வலியுறுத்தியும், சமய நல்லிணக்கதிற்கும், தீண்டாமைக்கு எதிராகவும், முழு மதுவிலக்கு கோரியும் 17 முறை, 139 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டங்கள் மேற்கொண்டார்.அவற்றில் மூன்று முறை 21 நாட்கள் கொண்ட தொடர் உண்ணாநிலைப் போராட்டங்களை நடத்தினார்.

மகாத்மா நினைவு நாளை அனுசரிக்கும் நிகழ்வு நமது காமராஜர் மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது . மகாத்மா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *