காமராஜர் மக்கள் கட்சி சமூக ஆர்வலர்களுடன் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது
22/02/2025
சிவகங்கை பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சங்கரபதி கோட்டை மற்றும் பண்பாட்டுச் சின்னங்களை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் எனவும் , பாரம்பரிய குலத்தை மீட்டு படகு சவாரி அமைத்து கொடுக்க வேண்டும் எனவும் ,
வரலாற்று சின்னங்களை அழிக்காமலும் மருது பாண்டியர்கள் பெருமையை காக்கும் வகையில் சங்கரபதி கோட்டையை மருது பாண்டியர் சிலை மற்றும் பூங்கா அமைத்திட வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சியின் மூலம் கோரிக்கை வைக்கப்படுகிறது.

இத்தகைய கோரிக்கைகளை நிறைவேற்ற சமூக ஆர்வலர்களுடன் இணைந்து காமராஜர் மக்கள் கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. ஆர்ப்பாட்டத்தில் காமராஜர் மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் திரு அருளானந்தம் மற்றும் இளைஞர் அணி அலெக்ஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
