காரைக்கால் தெருக்கள் பலருக்கும் நோய்தொற்றுகள் ஏற்படும்
28/02/2025
காரைக்கால் தெருக்கள் பலருக்கும் நோய்தொற்றுகள் ஏற்படும் வகையில் திரும்பிய திசையெல்லாம் குப்பைகளாக காட்சியளிக்கிறது.அனைத்து தெருக்களிலும் கழிவுநீர் பாதை நிரம்பி வழிகிறது.அதை சுத்தம் செய்ய போதுமான ஊழியர்கள் இல்லாத காரை நகராட்சி.


கோடை வந்துவிட்டால் கொசுக்களின் தொல்லை உச்சத்தை எட்டும் என்று இருந்த மக்களுக்கும் இப்பொழுதே அதன் தொல்லை தொடங்கி விட்டது! கொசுக்கள் சிறியவை என்றாலும் மிகவும் கொடிய வைரஸ்களை கொண்டது.
அரசு கொசு ஒழிப்பதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் கொசு உற்பத்தி ஆகுவதற்கான சூழலையே உருவாக்கி வருகிறது. காரைக்கால் மக்கள் தூங்குவதற்கு தனியாக நிதி ஒதுக்க வேண்டிய அவசியத்தில் கொசு மருந்து நிறுவனங்களுக்கு “கப்பம்” கட்டியே தீர வேண்டும் என்ற சூழ்நிலையில் வாழ்கின்றனர்.
மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற கொடிய நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை அழிக்க “கொசு ஒழிப்பு மருந்து” காரைக்கால் முழுவதும் அடிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகிறோம் காமராஜர் மக்கள் கட்சி வேண்டுகோள் வைக்கிறது.