திமுகவின் ஹிந்தி எதிர்ப்பு அரசியல் அன்றே எச்சரித்த காமராஜர்
21/02/2025
மும்மொழிக் கொள்கையை அமல் படுத்துவதாக ஒப்புதல் அளித்து விட்டு MoU ல் கையெழுத்தும் இட்ட பின்னரும் இரண்டு வருடங்கள் நிதியை வாங்கியது மட்டுமல்லாமல் மும்மொழிக் கொள்கையையும் அமல்படுத்தாமல் மத்திய அரசுக்கு எப்படி ‘ டிமிக்கி’ கொடுத்தீர்கள்.? அதனால்தான் மத்திய அரசு இவ்வருடம் நிறுத்தி விட்டது. அந்த இரண்டு வருட நிதியை வாங்கி என்ன செய்தீர்கள் என்பதை விளக்கவும் .

1965 ல் மொழியை மையப்படுத்தி நூற்றுக்கணக்கான இளந்தலை முறையினரை துப்பாக்கி சூட்டிற்கு இரையாக்கி ஆட்சியைப் பிடித்த திமுக கடந்த 55 வருடங்களாக மொழிப் பிரச்சினையை வைத்தே ஆட்சி செய்கிறது. இது 1965 அல்ல.. மாணவர்களின் சிந்தனை மாறுபட்டு விட்டது.இனிமேல் நீங்கள் மொழியை வைத்து மக்கள் தலையில் மிளகாய் அரைக்க முடியாது. திமுக தலைவர்கள் நடத்தும் பள்ளிகளிலும் மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பீர்களா..? உங்கள் பையனே தமிழ் படிக்காமல் French laungage ஐ மூன்றாவது பாடமாக படிப்பதாக கூறியதை தமிழக மக்கள் வீடியோவில் பார்த்துள்ளார்கள்.

அவ்வாறானால் பணக்கார வீட்டுக் குழந்தைகள் மூன்றாவது மொழியாக Freuch , Latin போன்ற மொழிகள் படித்து விட்டு மேல்நாட்டில் போய் படிக்கலாம். ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் கூலித்தொழிலாளியின் குழந்தை மூன்றாவது மொழி படிக்காமல் உங்கள் கட்சிக்கு போஸ்டர் ஒட்டுவது, கொடி பிடிப்பது , கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பது போன்ற கொத்தடிமை வேலையை செய்து கொண்டு காலத்தை ஓட்டவேண்டுமா..? சரி . அரசு பள்ளிகளிலாவது தமிழை நன்றாக சொல்லிக் கொடுக்கின்றீர்களா என்றால் அதுவுமில்லை. 2022 ஆம் வருடம் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 46,300 மாணவர்களும 2023 ஆம் ஆண்டு சுமார் 36,000 மாணவர்களும் Fail ஆனதாக தகவல் வெளிவந்துள்ளதே..?
