பாலத்திற்கு பாதுகாப்பு சுவர் அமைத்து கொடுக்க காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை
19/02/2025
வாரச்சந்தை செல்வதற்கு காரைக்கால் வடக்கு பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் சாலை “சேணியர் குளத்து வீதி” இத்தெருவின் கடைசி வளைவில் உள்ள வாய்க்கால் மதகு பிரஞ்சு ஆட்சியர் காலத்தில் கட்டியது.
அது வலிமையுடன் இருந்தாலும் அதன் பாதுகாப்பு சுவர் இடிந்து உள்ளது, அதனால் அவ்வழியே வாகனங்களில் செல்வோருக்கு பாதுகாப்பு அற்ற நிலை உள்ளது இரவு நேரத்தில் விளக்கின்றி இருண்டு கிடப்பதால் நடந்து செல்பவர்கள் கூட பயந்த நிலையில் செல்லவேண்டி உள்ளது.
அந்த சிறிய பாலத்திற்கு பாதுகாப்பு சுவர் அமைத்து கொடுக்க காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை வைக்கிறது.

