கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் தலைவர் தமிழருவி மணியன்

2/3/2025, திண்டுக்கல்,

பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும் என தலைவர் தமிழருவிமணியன் வலியுறுத்தினார். இதுகுறித்து திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வந்தால், சிபிஎஸ்இ தரத்திலான கல்வி, ஏழைக் குழந்தைகளுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது. திராவிட மாடல் ஆட்சி நடத்துவோர், திராவிட மொழிகளில் ஒன்றை 3-ஆவது மொழியாகப் பயிற்றுவிக்கலாம். இருமொழிக் கொள்கையில் தவறு கிடையாது. நாட்டிலேயே மொழிக்காக போராட்டம் நடத்திய ஒரே மாநிலம் தமிழ்நாடு. ஆனால், தமிழே படிக்காமல் பட்டதாரியாக முடியும் என்ற நிலை தமிழ்நாட்டில் தான் நிலவுகிறது. கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் தாய்மொழி மாநிலங்களில் தவிர்க்க முடியாது. மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை, பொதுப் பட்டியலுக்கு மாற்றியவர் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி. அந்த காங்கிரஸ் கட்சியோடு தான் திமுக கூட்டணி வைத்திருக்கிறது. கல்வி மாநிலப் பட்டியலில் இருந்திருந்தால், ‘நீட்’ தேர்வை நீக்கி இருக்க முடியும்.

14 ஆண்டுகளாக மத்திய அரசில் தொடர்ந்து அங்கம் வகித்த திமுக, மாநிலப் பட்டியலுக்கு கல்வியை மாற்ற ஏன் முயற்சிக்கவில்லை? தென்னிந்திய மாநிலங்களில் முதல்வர்களை ஒருங்கிணைத்து, கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான முயற்சியை முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் கனிம வளக்கொள்ளை அதிக அளவில் நடைபெ றுகிறது.வியூக அமைப்பாளரை நம்பி அரசியல் செய்வதைத் தவிர்த்து, மக்களைச் சந்தித்து அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொள்ள தவெக விஜய் முன் வர வேண்டும் என்றார்.

நன்றி-தினமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *