சென்னையில் ரேஷ்மா அறக்கட்டளை முப்பெரும் விழா ‘கங்கையும் காவிரியும் இணைய வேண்டும்’ என்ற ஒலிநாடாவை தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டார்
10-03-2025, சென்னை,
ரேஷ்மா பவுண்டேஷன் நிறுவனர் அரிமா மணிவண்ணன் இல்ல விழா மற்றும் அவர் எழுதிய பாடல்களின் கேசட் வெளியிட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாஆகிய முப்பெரும் விழா ராயப்பேட் டையில் உள்ள ஒய். எம். சி. மைதானத்தில் நடைபெற்றது.
கங்கையும் காவிரியும் இணைய வேண்டும் என்ற பாடல் ஒலி நாடாவை காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் வெளியிட தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜி.ஆர் வெங்கடேஷ். தமிழ்நாடு வாழ்வுரிமைக்கட்சி துணை பொது செயலாளர் து.வெ. வேணுகோபால் ஆகியோர் பெற்று கொண்டனர்.

ரேஷ்மா பவுண்டேஷன் சார்பில் ராயப்பேட்டை ஒய். எம். சி. ஏ. மைதானத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் நலத்திட்ட உதவி மற்றும் கவிஞர் அரிமா மணிவண்ணன் எழுதிய கங்கையும் காவிரியும் என்ற சமூக பாடலின் ஒலி நாடாவை காமராஜ் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் வெளியிட தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜி.ஆர். வெங்கடேஷ் பெற்று கொண்ட போது எடுத்த படம். இதில் அரிமா சம்பத். சத்திரியன் து.வெ. வேணுகோபால், அரிமா முருகேஷ். அரிமா முருகன், அரிமா பிரேம்குமார், இசையமைப்பாளர் ஓரத்தநாடு கோபு ஆகியோர் உள்ளனர்.
இந்தவிழாவில் அற்புதங்கள் நிகழ்த்தும் நம்ம தலைவர் பாடலுக்கான ஒலி நாடாவை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என். ஆர் தனபாலன் வெளியிட ஜி.ஆர். வெங்கடேஷ், சம்பத் பெற்று கொண்டனர். மேடையில் பேசிய காமராஜர் மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் அமெரிக்க நாட்டு அறிஞர் இங்கர்சால் கூறி மற்றவர் மகிழ்ச்சி அடையச் செய்வதை நாம் மகிழ்ச்சி அடவதற்கான வழி என்கிற வாசகத்தை கூறி அரிமா மணிவண்ணனை வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் நிழல்கள் ரவி. அரிமா மணிவண்ணன் மக்களுக்கு செய்த தொண்டு, குறிப்பிட்டு தர்மம் தலை காக்கும் என்ற பாடலை பாடி வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற வட்டாட்சியர் ப.ராஜ சேகர்தலைமைதாங்கினார். ரேஷ்மா பவுண்டேஷன் நிறுவனர் மணிவண்ணன் வரவேற்புரை ஆற்றினார். ஞானோதயாஆலய நிர்வாகி
வசந்தா ரவிச்சந்திரன்,தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநிலச் செயலாளர் திருஞானசம்பந்தம், மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு மாநில செயலாளர் ஆர்.பி சுரேஷ். தமிழக பாரதிய ஜனதா கட்சி உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் ஜி.ஆர். ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுங்கம், சரக்கு மற்றும் சேவை வரிகள் இணை ஆணையர் ஆர். நடராஜன், அரிமா ராஜேஷ் என்.தவே, எஸ்.முகமது ரபி, அரிமா மாவட்டஆளுநர் முருகேஷ் குமார், தேஜோ என்ஜினீய ரிங்லிமிடெட் நிர்வாக இயக்குநர் மனோஜ் ஜோசப், எக்ஸ்னோரோ இன்டர்நேஷனல் கே.எஸ்.எஸ் செந்தூர் பாரி, மெட்ராஸ் பல்கலைக் கழக உடற்கல்வி இயக்குனர் வி.மகாதேவன், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக சிறப்பித்தனர். மேலும் திருநங்கைகள்
எஸ்.தூரி மற்றும் சுதா, காளி காம்பாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அரிமா இ.எம்.எஸ் மோகன், டேப் லெட்ஸ் இந்தியா லிமிடெட் விற்பனை மற்றும் சந்தைப் படுத்துதல் பிரிவு துணைத் தலைவர் ஜெ.காட்பிரட் பொன்ராஜ், திரைப்பட இயக்குநர் ராசி.மணிவாச கன், பின்னணி பாடகர் ஓரத் தநாடு கோ.பிரபு, அரிமா கதாடு கோ.பிரபு, அரிமா துணை ஆளுநர் எஸ்.முரு கன். இரண்டாம் நிலை துணை ஆளுநர் என். ஆர்.டி பிரேம்குமார் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் ஜி.கே.எம் அரிமா சங்க தலைவர் ரகு, செயலா ளர்மோகனசுந்தரம். பொரு ளாளர் பார்த்த சாரதி. ஜி. கே.எம் அரிமா சங்க முன் னாள் தலைவர்கள் ராஜம் எம்.பி. நாதன், சகாயராஜ ரவி, சரவணன், உட்படபலர் கலந்து கொண்டனர். ரேஷ்மாபவுண்டேஷன்நிறு வனர் அரிமா மணிவண்ண னுக்கு ஜி.கே.எம். அரிமா சங்கம்சார்பாக நினைவுபரிசு வழங்கப்பட்டது.
(ரேஷ்மா பவுண்டேஷன் சார்பில் ராயப்பேட்டை ஒய். எம். சி. ஏ. மைதானத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் நலத்திட்ட உதவி மற்றும் கவிஞர் அரிமா மணிவண்ணன் எழுதிய கங்கையும் காவிரியும் என்ற சமூக பாடலின் ஒலி நாடாவை காமராஜ் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் வெளியிட தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜி.ஆர். வெங்கடேஷ் பெற்று கொண்ட போது எடுத்த படம். இதில் அரிமா சம்பத். சத்திரியன் து.வெ. வேணுகோபால், அரிமா முருகேஷ். அரிமா முருகன், அரிமா பிரேம்குமார், இசையமைப்பாளர் ஓரத்தநாடு கோபு ஆகியோர் உள்ளனர்.)
