தமிழக மக்கள் தொகை அடிப்படையில் ஒரு கோடி பேர் மது அருந்தும் குடி நோயாளிகளாக மாற்றிய திமுக அரசு. தமிழ்நாட்டில் 1 கோடி (TASMAC ) குடிநோயாளிகளா…?
12/03/2025;
தமிழகத்தில் குடி நோயாளிகள் 1 கோடியே 12 லட்சம் பேர் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களில் 70 லட்சம் பேர் தினமும் குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். இதனால் ஆண்டுக்கு அவர்களுக்கு 67,552 கோடி வருமான இழப்பு ஏற்படுகிறது. அதே நேரத்தில் அரசுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் TASMAC நிறுவன அலுவலகங்களில் அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1000 கோடிக்கு மேலான முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள் கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமலாக்கத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அதிகபட்ச சில்லறை விலையைவிட (MRP) கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை, உற்பத்தி நிறுவனங்களுக்கு மதுபான விநியோக வாய்ப்பை தருவது தொடர்பாக அதிகாரிகள் மீதான லஞ்ச குற்றச்சாட்டு, பணி நியமனம் மற்றும் பணியிட மாறுதல்கள் தொடர்பாக மூத்த அதிகாரிகள் மீதான கையூட்டு குற்றச்சாட்டு என தமிழ்நாடு வாணிபக் கழக (டாஸ்மாக்) நிர்வாகத்தின் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
1988, ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகளின் அடிப்படையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் அலுவலகங்களில் கடந்த 6-ம் தேதி் சோதனை மேற்கொண்டனர். பணமோசடி தடுப்புச் சட்டம், 2002-ன் கீழ், டாஸ்மாக்குடன் தொடர்புடைய நபர்களுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் நிறுவனங்களிலும் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
