நாடகம் அரசியல் நடத்தும் தி.மு.க.

2/03/2025

தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க் கட்சியாக இருந்தாலும் எப்போதும் முதன்மையாக நிற்கும்.தி.மு.க. பிறந்தது முதல், 75 ஆண்டுகளாக சந்திக்காத களம் இல்லை; எதிர்கொள்ளாத அடக்கு முறைகள் கிடையாது.வழக்குகள், சிறைவா ம்,உயிர் தியாகம் எல்லா வற்றையும் தாங்கித்தான் தாய்மொழியாம் தமிழை யும், தமிழர்களின் உரிமையையும் காக்கிற கட்சியாக தி.மு.க.. திகழ்கிறது.



அதனால் தான் என். தி.மு.க., ஒரு போராட் டத்தை கையில் எடுத்தால், இந்தியாவை ஆட்சி செய்பவர்கள் அஞ்சுகின்றனர்; அலறுகின்றனர். நம்மை தேச விரோதிகள் என்று குற்றஞ்சாட்டுகின்தனர். மத்திய அரசின் தன்மையையும்,மொழிவழிப் பண்பாடுகளையும் சிதைத்து, ஒற்றுமையை குலைப்பவர்கள் உண்மையான தேச விரோதிகள்
காலம் மாறி விட்டது. அதனால், ஹிந்தியை திணிப்போம் என்கின்றனர், இன எதிரிகள்,எத்தனை காலங்கள் மாறினாலும், அதற்கு ஈடு கொடுத்து நிற்கும் செம் மொழியாம் தமிழ் மீது ஹிந்தி, சமஸ்கிருத ஆகிக்கத்திற்கு இடம் கொடுக்க மாட்டோம். உயிரைக் கொடுத்தேனும் தமிழைக் காப்போம். அதில் யாருக்காகவும் விட்டுத்தர மாட்டோம்!



பிறந்த நாள் வேண்டுகோளாக, ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன். தமிழகம் தன் உயிர் பிரச்னையான மொழிப்போரையும், தன் உரிமை பிரச்னையான தொகுதி மறுசீரமைப்பையும் எதிர் கொண்டிருக்கிறது. இதன் உண்மையான தோக்கத்தை, நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தொகுதி மறுசீர மைப்பு என்பது, நம் மாநிலத்தின் கயமரியாதை, சழக நீதியை பாதிக்கும்; அரசின் சமூக நலத் திட்டங்களையும் பெரிதும் பாதிக்கும். இதை எதிர்த்து, இந்தியாவுக்கே வழிகாட்டி யாக நாம் போராட்டத்தை துவக்கி உள்ளோம். கர்நாடகா, பஞ்சாப்,தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து, நமக்கான ஆதரவு குரல் வந்துள்ளது.


மறுசீரமைப்பில் தமிழகத்திற்கான தொகுதிகளை குறைக்க மாட்டோம் என சொல்கின்றனரே தவிர, மற்ற மாநிலங்களின் தொகுதிகள் எண்ணிக்கையை அதிகரிக்க மாட்டோம் என சொல்லவில்லை. தமிழகத்தின் நலனையும், எதிர்காலத்தையும், யாருக்காகவும் எதற்காகவும் விட் டுத்தர மாட்டோம் என கும் உறுதியேற்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *