பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் 190 வது ஜெயந்தி விழா தலைவர் தமிழருவி மணியன் ஆன்மிக உரை
9 /03/2025,தஞ்சாவூர்
தஞ்சாவூரில் சனிக்கிழமை 8/3/2025 நடைபெற்ற பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் 190-ஆவது ஜெயந்தி விழா சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய தலைவர் தமிழருவி மணியன். தஞ்சாவூரில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் 190-ஆவது ஜெயந்தி விழா சிறப்பு நிகழ்ச்சியில் ஆன்மிக வரலாற்றில் ஓர் அதிசயம் ஸ்ரீ ராமகிருஷ்ணர் என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது
இந்த மண்ணில் எத்தனையோ துறவிகள் வந்துள்ளனர். உலக முழுவதும் எத்தனயோ தத்துவஞானிகள் உருவெடுத்தனர். ஆனால், இவர்களிலிருந்து ராமகிருஷ்ண பரமஹம்சர் தனித்துவமானவர். நேருக்கு நேராக கடவுளை நம்மால் காண முடியும் என்பதை நமக்கு உணர்த்தியவர் பரஹம்சர் என மகாத்மா காந்தி குறிப்பிட்டார்.



நாம் கடவுளைக் காணக்கூ டிய நிலையில் நம்மைக் கொண்டு வந்து நிறுத்தினார் ராமகிருஷ்ண பரமஹம்சர். பரமஹம்சர் வடித்துக் கொடுத்த வார்த்தைகள் அனைத்தும் கற் றறிந்தவர்களுடைய வாக்குகளாக அல்லாமல், அவருடைய வாழ்க்கை புத்தகத்தின் அத்தியாயங்களாக இருந்தன. அவர் தன்னுடைய சுய அனுபவங்களையே கூறினார்.
ராமகிருஷ்ணர் 3 வகுப்பு வரை மட்டுமே படித்தவர். அவர் சாத்திரங்களையும், வேத, உபநிஷதங்களையும் கற்றவர் அல்லர். ஆனால், இவரை சாத்திரங்களையும், வேதங்களையும், உபநிஷதங்களையும் முழுவதுமாக அறிந்த விவேகானந்தர் கடவுளின் அவதாரமாக ஏற்று, அவருடைய சீடராக இருப்பதில் பெருமைக் கொண்டார். ராமகிருஷ்ணரிடமிருந்து பெற்ற செய்திகளை விவேகானந்தர் உலகம் முழுவதும் கொண்டு சென்றார். அவரை உலக தத்துவ ஞானிகளும் வியந்து பாராட்டினர்.அவர் வாழ்ந்த 50 ஆண்டு காலத்தில் சாதித்த சாதனைகளை வேறும் யாரும் சாதித்ததாக வரலாறு இல்லை. இறைவனைக் காண சாத்திரங்களோ, மந்திரங்களோ வேண்டாம் என்பதுதான் ராமகிருஷ்ண பரமஹம்சரின் கோட்பாடு. சமய பேதம் கொள்வதும், என் மதம் பெரிது, அந்த மதம் குறையுடையது என்பதும் பேதமையானது எனச் சொன்னவர் ராமகிருஷ்ண பரமஹம்சர். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் கோ. விஜயராமலிங்கம், தஞ்சாவூர் ராம கிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்த மஹராஜ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.


தஞ்சாவூர் மாநகரில் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஜெயந்தி விழா ( 8/03/2025 )வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது . தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு கலையரங்கத்தில் தலைவர் தமிழருவி மணியன் தலைமையில் மாபெரும் ஆன்மீக மிக சொற்பொழிவு உரை நிகழ்த்தப்பட்டது. இதில் மாணவர்கள், பொதுமக்கள் என கலந்து கொண்டனர். விழாவில் தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் ஆன்மிகம் சார்ந்த வரலாற்று பதிவுகள் மற்றும் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்க்கை வரலாறு பற்றியும், தனிமனித ஒழுக்கம் , இறை நம்பிக்கை, வாழ்வியல் முறை என பல துறைகளில் சிந்தனைக் கருத்துக்களை மக்களுக்கு எடுத்துரைத்தார்.





