மதுரை மாநகராட்சியின் சார்பில் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் காமராஜர் மக்கள் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு
12/03/2025
மதுரை மாநகர் பல்வேறு மக்கள் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக காமராஜர் மக்கள் கட்சி மக்கள் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி பல்வேறு ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. மேலும் மக்கள் பிரச்சனையை தீர்வு காணும் வகையில் 11/03/2025 மாவட்ட குறைதீர் முகாமில் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மாவட்ட தலைவர் திரு . அயல்ராஜ் அவர்கள் தலைமையில் மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி வணக்கத்திற்குரிய மேயர் அவர்கள் முன் மனு அளிக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சியின் சார்பில் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் காமராஜர் மக்கள் கட்சியின் சார்பில் கோரிக்கை மனுவை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் அவர்களிடம் மாவட்ட தலைவர் ஜி. அய்யல் ராஜ் தலைமையில் வழங்கப்பட்டது.

நிகழ்வில் மாநில முதன்மைச் செயலாளர் சீ. கிருஷ்ணமூர்த்தி, மாநில கொள்கை பரப்பு அணி மாநில துணைச் செயலாளர் எஸ். ஈஸ்வரன், இளைஞர் அணி மாநில செயலாளர் அ.அரவிந்தன், திருப்பரங்குன்றம் தொகுதி தலைவர் என். ரவிச்சந்திரன் உடன் இருந்தனர்.


