விடுமுறை நாளில் போராட்டம் , அய்யோ பாவம் !
25/03/2025
தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களை நினைத்தால் பரிதாபமாக தான் உள்ளது.திமுக ஆட்சிக்கு வந்தால் தாங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும். நினைத்ததெல்லாம் நடக்கும். மக்களுக்கு விடியல் தருவாரோ மாட்டாரோ நிச்சயம் அரசு ஊழியர்களுக்கு விடியல் தருவார் என்ற நம்பிக்கையில் ஜாக்டோஜியோ போன்ற பல அரசு ஊழியர்கள் சங்கங்கள் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக நேரடியாக பிரச்சாரமே செய்தனர்.வாக்குசாவடியிலும் சிலர் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டனர்.ஆனால் அப்படி பாடுபட்ட அரசு ஊழியர்களின் இன்றைய நிலையை பார்த்து அழுவதா சிரிப்பதா தெரியவில்லைஅரசு ஊழியர்களின் எந்த கோரிக்கையையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை என்பதை விட அழுது ஒப்பாரி வைக்க போராட்டத்திற்கு கூட நெருக்கடி வேலை நாட்களில் போராட்டம் செய்தால் வேலைக்கே ஆபத்து வரும் என்ற அச்சத்தில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று போராட்டம் நடத்தும் பரிதாபமான நிலையில் அரசு ஊழியர்கள் உள்ளனர்.கடந்த வாரம் ஒரு அரசு ஊழியர்கள் சங்கம் போராட்டம் அறிவித்து அதை வாபஸ் பெற்ற பின்பும் அன்றைய தினத்தில் விடுப்பு எடுத்த ஊழியர்கள் பட்டியலை தயார் செய்து அரசு நிர்வாகம் மிரட்டுகிறது. அன்று சொந்த காரணங்களுக்காக விடுப்பு எடுத்த அரசு ஊழியர்கள் கூட என்ன நடவடிக்கை வருமோ என அச்சத்தில் உள்ளளனர்.
தொழிலாளர் தோழன் என பினாத்திக் கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சியோ 25 கோடிக்கு திமுகவிடம் அடிமை சாசனம் எழுதி கொடுத்து அமைதியாக இருக்கிறது.கடந்த பிப்ரவரி மாதமே போராட்ட தேதி எல்லாம் அறிவித்த ஜாக்டோ ஜியோவை பட்ஜெட் வரை பொறுங்கள் என கடைசி வரை ஏமாற்றி திமுக அமைச்சர்கள் சாமர்த்தியமாக அரசு ஊழியர்கள் போராட்டத்தை தடுத்தனர்.தங்கள் சங்க தலைவர்களை நம்பி அரசு ஊழியர்களும் போராட்டத்தை தள்ளி வைத்தனர்.
இன்று நடக்கும் போராட்டம் கூட ஜாக்டோஜியோ தலைமை நிர்வாகிகள் தங்கள் சங்க உறுப்பினர்களை ஏமாற்றி திருப்திபடுத்தி சங்க பெயரை பொறுப்பை தக்கவைக்க தான் என்பது பல அரசு ஊழியர்களுக்கு தெரியும். பணியாளர்களிடம் மாதம் மாதம் சங்க கட்டணம் சந்தா பிரிக்கும் கம்யூனிச தலைவர்களுக்கோ, திமுகவுக்கு எதிராக வாய்திறக்கவே அச்சமாக இருக்கிறது.

பல இடங்களில் அரசு பணிகள் காலியாக உள்ளது. அந்த பணியையும் சேர்த்து தற்போதுள்ள பணியாளர்கள் தலையில் தூக்கி வருகின்றனர் இதை கேட்க நாதியில்லைபல்கலைகழக பேராசிரியர்களுக்கு பணி உயர்வு கிடைத்தும் 2வருடத்திற்கும் மேலாக சம்பள உயர்வு வரவில்லை. அதை கேட்டு போராடிய நிலையில் வழக்கமான சம்பளமே தாமதமாக்கப்பட்டது. சின்ன கோடு அருகில் பெரிய கோட்டை போடும் தந்திரம் அது.
இருக்கிற சம்பத்தையாவது 1ம் தேதி தாருங்கள் என மான்றாடும் நிலையில் கம்யூனிச மூட்டா சங்கம் கதிகலங்கி போயுள்ளது.பல துறையில் தற்காலிக பணியார்களை நிரந்தமாக்குவார்கள் என பலர் ஏமாந்து முதுமையடைந்தது தான் மிச்சம்போக்குவரத்து துறையில் பணி ஓய்வு பெற்ற பல மாதங்களாகியும் பணப்பலன்கள் வராமல் கண்ணீர் வடிக்கின்றனர். தற்போது மின்சார வாரியமும் அந்த நிலையில் உள்ளது.
தமிழகத்தில் போக்குவரத்து உட்பட பல அரசு துறை மறைமுகமாக தனியார் மயமாகி வருகிறது. தனியார்மயத்துக்கு எதிராக மத்திய அரசை மட்டும் கஞ்சி போட்ட சட்டை போட்டு கம்பீரம் காட்டும் கம்யூனிஸ்ட்கள் மாநில அரசிடம் மட்டையாகி விட்டார்கள்.அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை அடமானம் வைத்து கம்யூனிச தலைவர்கள் 25 கோடி வாங்கி MLA , MP ஆனது தான் மிச்சம்பாராளுமன்றத்தில் கூச்சலிட்டு வெளிநடப்பு செய்யும் கம்யூனிஸ்ட்கள் சட்டசபையில் சத்தமில்லாமல் நடுங்கி கிடக்கின்றனர்
ஆனால் எவ்வளவுபட்டாலும் எத்தனை முறை ஏமாந்தாலும் அரசு ஊழியர்களுக்கு திமுக கம்யூனிச பாசம் மட்டும் குறையாது. அவர்களை ஏமாற்றும் தந்திரம் அந்த இரண்டு கட்சிகளுக்கும் கைவந்த கலை.அடுத்த வாக்குறுதி அளிக்க அந்த இரண்டு கட்சிகளும் – மீண்டும் ஏமாற அரசு ஊழியர்களும் – 2026 தேர்தலுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்வார்கள்
திமுக தங்களை பாதுகாக்கும் , கம்யூனிச தொழிற்சங்க தலைவர்கள் தங்களுக்காக குரல் கொடுப்பார்கள் என இன்னமும் நம்பிக்கொண்டிருக்கும் அரசு ஊழியர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்
“நாய்க்கு தெரியாம இருக்கலாம் நல்லது கெட்டது பசுவுக்கு தெரிய வேண்டாமா பன்றியோடு சேர கூடாதுன்னு ” என்ற பழமொழி தான் ஞாபகம் வருகிறது